• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • Petrol Diesel Price | "பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வாய்ப்பில்லை": மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் திட்டவட்டம்

Petrol Diesel Price | "பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வாய்ப்பில்லை": மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் திட்டவட்டம்

பெட்ரோல், டீசல்

பெட்ரோல், டீசல்

சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று உயர்ந்து உள்ளது.

  • Share this:
    பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வாய்ப்பில்லை என பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். விலை உயர்வு பிரச்னைக்குரியது என்றபோதும், நலத் திட்டங்களுக்காக பணத்தை அரசு சேமிக்க வேண்டியுள்ளதாக தெரிவித்துள்ளார். தடுப்பூசி போடும் பணிக்கு ஒரு வருடத்தில் 35,000 கோடி ரூபாய் தேவைப்படுவதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். விலை உயர்வை ராகுல் காந்தி விமர்சித்த நிலையில், அவருக்கு ஏழைகளின் மேல் அக்கறை இருந்தால் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளும் பஞ்சாப், ராஜஸ்தான், மகாராஷ்டிராவில் வரியை குறைக்கச் சொல்லலாம் என்றும் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மேலும் படிக்க... மளிகை பொருட்களை வாங்க ஆம்புலன்ஸின் வந்த நபருக்கு அபராதம்!

    மே 4ம் தேதியில் இருந்து 23 வரை பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்ட நிலையில் சுமார் 6 ரூபாய் வரை விலை கூடியுள்ளது. இந்நிலையில், சென்னையில் கடந்த 2 நாட்களாக விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்ட பெட்ரோல் மற்றும் டீசல் இன்று விலை அதிகரித்து உள்ளது. இதன்படி, பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு நேற்றைய விலையில் இருந்து 26 காசுகள் உயர்ந்து ரூ.97.69க்கும், டீசல் விலை 28 காசுகள் உயர்ந்து ரூ.91.92க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: