• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • Petrol-Diesel Price | தொடர்ந்து அதிகரிக்கும் பெட்ரோல் டீசல் விலை...

Petrol-Diesel Price | தொடர்ந்து அதிகரிக்கும் பெட்ரோல் டீசல் விலை...

பெட்ரோல், டீசல்

பெட்ரோல், டீசல்

சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 89.70 ரூபாய், டீசல் லிட்டருக்கு 82.66 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

  • Share this:
    தமிழகம் உட்பட நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. டெல்லியில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த வியாழக்கிழமை புதிய உச்சத்தை  எட்டியது. அன்று முதல் அதன் விலை அதிகரித்துக்கொண்டேதான் செல்கிறது. எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 35 பைசா வரை உயர்த்தியுள்ளன.

    இந்நிலையில் டெல்லியில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ 87.30 ஆகவும், டீசல் விலை ஒரு லிட்டருக்கு ரூ.77.48 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல மும்பையிலும் பெட்ரோல் மற்றும் டீசல் ஒரு லிட்டருக்கு முறையே. 93.83 மற்றும் 84.36 பைசாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

    மெட்ரோக்களில் பெட்ரோல்,  டீசல் விலை

    டெல்லி - 87.30;  77.48

    மும்பை - 93.83 ; 84.36

    கொல்கத்தா - 88.63;  81.06

    சென்னை - 89.70;  82.66

    பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் சர்வதேச விலை மற்றும் அந்நிய செலாவணி விகிதங்களுக்கு ஏற்ப தினசரி அடிப்படையில் மாற்றி நிர்ணயிக்கப்படுகின்றன.

    சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 89.39 ரூபாய், டீசல் லிட்டர் 82.33 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று பெட்ரோல் விலை 31 காசு உயர்ந்து லிட்டர் 89.70 ரூபாய்க்கும் , டீசல் விலை 33 காசுகள் உயர்ந்து லிட்டர் 82.66 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

    மேலும் படிக்க...சிவகங்கையில் அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கொலை...



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: