Petrol-Diesel Price | பெட்ரோல், டீசல் விலை: இன்றைய நிலவரம் என்ன?

Petrol-Diesel Price | பெட்ரோல், டீசல் விலை: இன்றைய நிலவரம் என்ன?

மாதிரி படம்

சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 93.11 ரூபாய், டீசல் லிட்டருக்கு 86.45 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

  • Share this:
    பொதுத் துறையைச் சேர்ந்த, பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் நிறுவனம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய மூன்று நிறுவனங்கள், சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, தினமும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து வருகின்றன. இந்நிலையில், இன்று பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமின்றி, நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் பெட்ரோல், லிட்டர் 93.11 ரூபாய், டீசல் லிட்டர் 86.45 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    புதுச்சேரியிலும் பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து மாற்றம் இல்லாமல் உள்ளது. இன்று பெட்ரோல் ஒரு லிட்டர் விலை 91.34 ரூபாயாகவும், டீசல் விலை ஒரு லிட்டர் 84.80 ரூபாயகவும் விற்பனை செய்யப்படுகிறது.

    புதுடெல்லி பெட்ரோல் விலை இன்று 91.17 ரூபாயாகவும் டீசல் விலை 81.47 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. ஆந்திரா பெட்ரோல் விலை இன்று 87.24 ரூபாயாகவும் டீசல் விலை 80.21 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

    மேலும் படிக்க...தனியார் மருத்துவமனைகள் கொரோனா தடுப்பூசிக்கு கட்டணம் வசூலிக்கலாம்..



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: