• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • Petrol-Diesel Price | மீண்டும் உயர்ந்தது பெட்ரோல், டீசல் விலை: இன்றைய நிலவரம் என்ன?

Petrol-Diesel Price | மீண்டும் உயர்ந்தது பெட்ரோல், டீசல் விலை: இன்றைய நிலவரம் என்ன?

மாதிரி படம்

மாதிரி படம்

சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 93.11 ரூபாய், டீசல் லிட்டருக்கு 86.45 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

  • Share this:
    பொதுத் துறையைச் சேர்ந்த, பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் நிறுவனம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய மூன்று நிறுவனங்கள், சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, தினமும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து வருகின்றன. இந்நிலையில் சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 21 காசுகள் அதிகரித்து ரூ 93.11 ஆகவும், டீசல் லிட்டருக்கு 14 காசுகள் அதிகரித்து ரூ 86.45 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

    புதுச்சேரியில், நேற்று பெட்ரோல் விலை 92.55 ரூபாயாகவும்
    டீசல் விலை 86.08 ரூபாயாகவும் இருந்தது. இந்நிலையில் நேற்று பெட்ரோல்- டீசல் மீதான வாட் வரி 2 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியானதை அடுத்து இன்று லிட்டருக்கு பெட்ரோல் ரூ.1.21 காசுகள் வரை குறைந்துள்ளது. டீசல் 1.28 ரூபாய் என குறைந்தது. இதனால், புதுச்சேரியில் இன்று பெட்ரோல் விலை 91.34 ரூபாயாகவும், டீசல் விலை 84.80 ரூபாயகவும் விற்பனை செய்யப்படுகிறது.

    டெல்லியில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 91.17 ரூபாயாகவும்  டீசல் விலை லிட்டருக்கு 81.47 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்துள்ளது.

    மேலும் படிக்க... Tamil Nadu Election 2021 | தென்மாவட்டங்களில் மூன்று நாள் பிரசாரம்: ராகுல் காந்தி இன்று தமிழகம் வருகை

     



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: