• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • Petrol-Diesel Price | பெட்ரோல், டீசல் விலை: இன்றைய நிலவரம் என்ன?

Petrol-Diesel Price | பெட்ரோல், டீசல் விலை: இன்றைய நிலவரம் என்ன?

பெட்ரோல்-டீசல் விலை

பெட்ரோல்-டீசல் விலை

அந்நிய செலாவணி விகிதங்களுடன் சர்வதேச சந்தையில் கச்சா விலை என்ன என்பதைப் பொறுத்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாறுகிறது.

  • Share this:
    பொதுத் துறையைச் சேர்ந்த, பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் நிறுவனம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய மூன்று நிறுவனங்கள், சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, தினமும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து வருகின்றன. இந்நிலையில் சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமின்றி, நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது. அதாவது பெட்ரோல், லிட்டர் 92.90 ரூபாய், டீசல் லிட்டர் 86.31 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    இதேபோலவே புதுச்சேரியிலும் நேற்றைய விலையில் இருந்து மாற்றம் இன்றி பெட்ரோல் விலை லிட்டருக்கு 92.55 ரூபாய்க்கும் டீசல் விலை லிட்டருக்கு 86.08 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    மேலும் படிக்க... வடிவேல் சொல்வதை போல கிணத்தை காணவில்லை என பல புகார்கள் வருகின்றன... இனி கவலை வேண்டாம்... - மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

    டெல்லியில் பெட்ரோல் விலை 90.93 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 81.32 ரூபாயும் விற்பனை செய்யப்படுகிறது. மும்பையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 97.34 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ 88.44 ஆகவும் உள்ளது. கொல்கத்தாவில் பெட்ரோல் ரூ 91.12 ஆகவும், டீசல் லிட்டருக்கு ரூ 84.20 ஆகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: