Petrol-Diesel Price | இன்றும் உயர்ந்தது பெட்ரோல், டீசல் விலை: நிலவரம் என்ன?

பெட்ரோல்

சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 92.90 ரூபாய், டீசல் லிட்டருக்கு 86.31 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

  • Share this:
    தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வரும் பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 92.59 ரூபாய், டீசல் லிட்டர் 85.98 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று பெட்ரோல் விலை 31 காசு உயர்ந்து லிட்டர் 92.90 ரூபாய்க்கும் , டீசல் விலை 33 காசுகள் உயர்ந்து லிட்டர் 86.31 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

    புதுச்சேரியில் ஒரு லிட்டர் பெட்ரோல் 92.55 ரூபாய்க்கும் டீசல் 86.08 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல கடலூரில் ஒரு லிட்டர் பெட்ரோல் 94 ரூபாய் 62 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.

    டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 90.58 ரூபாயிலிருந்து. 90.93 ஆகவும், டீசல் லிட்டருக்கு ரூ 80.97 லிருந்து 81.32 ஆகவும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மும்பையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு. 97.34 ரூபாயாகவும், டீசல் விலை லிட்டருக்கு 88.44 ரூபாயாகவும் விற்கப்படுகிறது.

    Must Read - பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை குறைத்த 4 மாநிலங்கள்... தமிழக அரசும் குறைக்குமா?

    இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் என்று பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: