• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • Petrol-Diesel Price | அதிரடியாக உயர்ந்து கொண்டே போகும் பெட்ரோல், டீசல் விலை.. இன்றைய நிலவரம்?

Petrol-Diesel Price | அதிரடியாக உயர்ந்து கொண்டே போகும் பெட்ரோல், டீசல் விலை.. இன்றைய நிலவரம்?

பெட்ரோல், டீசல்

பெட்ரோல், டீசல்

சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 92.59 ரூபாய், டீசல் லிட்டருக்கு 85.98 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

  • Share this:
    கடந்த ஒருவார காலத்திற்கும் மேலாக தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ள பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று பெட்ரோல் லிட்டர் 92.25 ரூபாய், டீசல் லிட்டர் 85.63 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று பெட்ரோல் விலை 34 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு 92.59 ரூபாய் எனவும், டீசல் விலையில் 35 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு 85.98 ரூபாய் எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    புதுச்சேரியில் இன்று இரு லிட்டர் பெட்ரோல் விலை 92.20 ரூபாய் எனவும் ஒரு லிட்டர் டீசல் விலை 85.72 ரூபாய் எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    இதேபோல டெல்லியில் இன்று லிட்டருக்கு பெட்ரோல் விலை 90.19 ரூபாய் ஆகவும், டீசல் விலை 80.60 ரூபாய் ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. மும்பையில் இன்று பெட்ரோல் விலை 96.62 ரூபாயாகவும் டீசல் விலை லிட்டருக்கு 87.67 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

    ராஜஸ்தானின் ஸ்ரீ கங்காநகரில், பெட்ரோல் 100.82 ரூபாய் ஆகவும், டீசல் லிட்டருக்கு 92.83 ரூபாய் ஆகவும் உயர்ந்தது. நாடு முழுவதும் உள்ள முக்கிய வாகன எரிபொருட்களின் மிக உயர்ந்த சில்லறை விலை இதுவாகும். இதைத் தொடர்ந்து மத்திய பிரதேசத்தின் அனுப்பூரில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு ரூ 100.57 ஆகவும், டீசல் ரூ 91.04 ஆகவும் விற்பனையாகிறது என்று இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் இணையதளத்தில் கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    மேலும் படிக்க...கொரோனா கால வழக்குகள் தள்ளுபடி.. சிக்கியவர்கள் நிம்மதிப் பெருமூச்சு..

    இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 11வது நாளாக உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் என்று பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: