• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • Petrol-Diesel Price | உச்சத்தை தொடும் பெட்ரோல், டீசல் விலை: இன்றைய நிலவரம் என்ன?

Petrol-Diesel Price | உச்சத்தை தொடும் பெட்ரோல், டீசல் விலை: இன்றைய நிலவரம் என்ன?

பெட்ரோல் விற்பனை நிலையம்

பெட்ரோல் விற்பனை நிலையம்

சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 92.25 ரூபாய், டீசல் விலை லிட்டருக்கு 85.63 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

  • Share this:
    கடந்த ஒருவார காலத்திற்கும் மேலாக தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ள பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்ந்துள்ளது. சென்னையில்  இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 27 காசுகள் அதிகரித்து 92.25 ரூபாய் எனவும், டீசல் விலை லிட்டருக்கு 32 காசுகள் அதிகரித்து 85.63 ரூபாய் எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    புதுச்சேரியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 91.81 க்கும், டீசல் ரூ. 88.72 க்கும் விற்பனை செய்யப்படுகின்றது. டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 90.19 ரூபாயாகவும், டீசல் விலை லிட்டருக்கு 80.60 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. இதேபோல மும்பையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 96.32 ஆகவும், டீசல் விலை ரூ 87.32 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    மத்திய பிரதேசத்தின் அனுப்பூரில், பெட்ரோல் விலை லிட்டருக்கு. ரூ. 100.25 ஆகவும், டீசல் ரூ 90.35 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
    ஸ்ரீகங்காநகரில் டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.47 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

    இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 11வது நாளாக உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் என்று பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

    மேலும் படிக்க... Ajith | வழிமாறிய நடிகர் அஜித்.. வழிகாட்டிய போலீஸ்! (வீடியோ)



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: