Petrol-Diesel Price | இன்றும் உயர்ந்தது பெட்ரோல், டீசல் விலை..

Petrol-Diesel Price | இன்றும் உயர்ந்தது பெட்ரோல், டீசல் விலை..

பெட்ரோல்

பெட்ரோல் டீசல் விலை ஏறத்தாழ ஒருவார காலமாகவே தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

  • Share this:
    கடந்த ஒருவார காலமாகவே ஏறுமுகத்தில் உள்ள பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 91.45 ரூபாய், டீசல் லிட்டர் 84.77 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று பெட்ரோல் விலை 23 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு 91.68 ரூபாய் எனவும், டீசல் விலை 24 காசுகள் அதிகரித்து , லிட்டர் 85.01 ரூபாய் எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடலூரில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 93 ரூபாய் 40 காசுகளுக்கும், டீசல் 86 ரூபாய் 66 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகின்றது.

    அதேபோல இன்று டெல்லியில் 25 பைசா உயர்ந்து ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 89.54 ரூபாயாகவும் டீசல் லிட்டருக்கு ரூ .79.95 ரூபாயாகவும் விற்பனையாகிறது. மும்பையில், பெட்ரோல் விலை இன்று லிட்டருக்கு 96 ரூபாயைத் தொட்டது. இது இதுவரை இல்லாத மிக உயர்ந்த விலையாகும், நேற்று ரூ .95.75 ஆக இருந்தது. 26 பைசா உயர்ந்துள்ளது. அதேபோல ஒரு லிட்டர் டீசல் விலை ரூ .86.98 ரூபாயாக அதிகரித்துள்ளது.  கொல்கத்தாவில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 90.54 ஆக இருந்தது ரூ 90.78 ஆகவும் டீசல் விலை லிட்டருக்கு ரூ 83.29 ஆக இருந்தது ரூ 83.54 ஆகவும் உயர்த்தப்பட்டது.

    பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் என்று பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

    மேலும் படிக்க...துணி உலர்த்துவதில் தகராறு.. கணவன் தாக்கியதில் மனைவி உயிரிழப்பு



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: