Petrol-Diesel Price | தொடர்ந்து அதிகரிக்கும் பெட்ரோல், டீசல் விலை: இன்றைய நிலவரம் என்ன?

பெட்ரோல்

தமிழகத்தில் பெட்ரோல் விலை இதுவரை இல்லாத வகையில், லிட்டருக்கு 90 ரூபாயைக் கடந்துள்ளது. விலை உயர்வை கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • Share this:
    சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 90.70 ரூபாய், டீசல் லிட்டருக்கு 83.86 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், விலை உயர்வை கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தை பொறுத்து, பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன. அதன்படி கடந்த சில நாட்களாகவே பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 5-வது நாளாக உயர்ந்துள்ளது. இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 26 காசுகள் அதிகரித்து 90.70 ரூபாய் எனவும், டீசல் விலை லிட்டருக்கு 34 காசுகள் அதிகரித்து 83.86 ரூபாய் எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

    இதேபோல டெல்லியில் இன்று பெட்ரோல் விலை 29 பைசா உயர்ந்து ரூ 87.85 லிருந்து. ரூ88.14 ஆகவும் டீசல் 35 பைசா அதிகரித்து லிட்டருக்கு 77.03 ரூபாயிலிருந்து78.38 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. இதற்கிடையில், மும்பையில்,  பெட்ரோல்  விலை லிட்டருக்கு. ரூ94.64 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ85.32 ஆகவும்  நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவதால் வாகன ஓட்டிகள் கலக்கத்தில் உள்ளனர்.

    மேலும் படிக்க... 20 திருக்குறள் சொன்னால் 1 லிட்டர் பெட்ரோல் இலவசம்.... 



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: