• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • Petrol-Diesel Price | மேலும் அதிகரித்த பெட்ரோல் டீசல் விலை: இன்றைய நிலவரம் என்ன?

Petrol-Diesel Price | மேலும் அதிகரித்த பெட்ரோல் டீசல் விலை: இன்றைய நிலவரம் என்ன?

பெட்ரோல், டீசல்

பெட்ரோல், டீசல்

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், வாகன ஓட்டிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

  • Share this:
    சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தை பொறுத்து, பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன. அதன்படி கடந்த சில நாட்களாகவே பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது.

    இதன்படி நேற்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 31 காசுகள் உயர்ந்து 89.70 ரூபாய்க்கும், டீசல் விலை லிட்டருக்கு 33 காசுகள் உயர்ந்து 82.66 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று பெட்ரோல், டீசல் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.

    இந்நிலையில் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 90 ரூபாயை நெருங்கியுள்ளது. இன்றைய நிலவரப்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 26 காசுகள் உயர்ந்து ரூ.89.96-க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை 24 காசுகள் அதிகரித்து ரூ.82.90-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    அதேபோல டெல்லியில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 87.60 ஆகவும், டீசல் லிட்டருக்கு ரூ 77.73 ஆகவும் உள்ளது. மும்பையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு 95 ரூபாயை நெருங்குகிறது. இன்றைய ஸ்பைக்கிற்குப் பிறகு, மும்பையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 94.12 ரூபாயும், டீசல் விலை ரூ 84.63 ஆகவும் உள்ளது.

    மேலும் படிக்க...குட்கா விவகாரம்: உரிமை மீறல் நோட்டீஸை எதிர்த்து ஸ்டாலின் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு

    அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை வாகன ஓட்டிகளை கலக்கம் அடைய செய்துள்ள நிலையில், விரைவில் விலையை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: