Petrol-Diesel Price | பெட்ரோல், டீசல் விலை: இன்றைய நிலவரம் என்ன?

பெட்ரோல் விற்பனை நிலையம்

சென்னையில் பெட்ரோல் ரூ.92.77க்கும் டீசல் ரூ.86.10க்கும் விற்பனையாகிறது.

  • Share this:
    பொதுத்துறையைச் சேர்ந்த, பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் நிறுவனம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய மூன்று நிறுவனங்கள், சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, தினமும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் கடந்த  24 நாட்களுக்கு பிறகு சென்னையில் பெட்ரோல், டீசல் விலை நேற்று முன்தினம்  குறைக்கப்பட்டது.

    கடந்த மாதம் 28-ந்தேதியில் இருந்து பெட்ரோல், டீசல் விலை எந்த மாற்றமும் இல்லாமல் காணப்பட்டது. அப்போது ஒரு லிட்டர் பெட்ரோல் 93 ரூபாய் 11 காசுக்கும், டீசல் 86 ரூபாய் 45 காசுக்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது அதன் விலை குறைக்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் பெட்ரோல் லிட்டருக்கு 34 காசும், டீசல் லிட்டருக்கு 35 காசும் குறைந்துள்ளது.

    இந்நிலையில் இன்று சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி விற்பனையாகிறது. இதன்படி பெட்ரோல் லிட்டர் ரூ.92.77 காசுகளும், டீசல் லிட்டர் ரூ.86.10 காசுகளுக்கும் விற்பனையாகிறது.

    மேலும் படிக்க... நான் சாதாரண குடும்பத்தில் பிறந்த ஒரு விவசாயி.. என்னை மக்கள் எளிதில் சந்திக்க முடியும்: அதிமுக வேட்பாளர் பரஞ்சோதி

    டெல்லியில் பெட்ரோல் விலை ரூ .90.78 ஆகவும், டீசல் லிட்டருக்கு     ரூ 81.10 ஆகவும் விற்பனையாகிறது. அதேபோல மும்பையில் பெட்ரோல் விலை ரூ97.19 ஆகவும், டீசல் லிட்டருக்கு ரூ
    88.20 ஆகவும் விற்பனையாகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: