Petrol-Diesel Price | பெட்ரோல், டீசல் விலை 2வது நாளாக குறைந்தது...

Petrol-Diesel Price | பெட்ரோல், டீசல் விலை 2வது நாளாக குறைந்தது...

பெட்ரோல் நிலையம்

கடந்த 24 நாட்களுக்கு பிறகு, பெட்ரோல், டீசல் விலையில் 2-வது நாளாக மாற்றம் ஏற்பட்டுள்ளது.

  • Share this:
    பொதுத்துறையைச் சேர்ந்த, பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் நிறுவனம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய மூன்று நிறுவனங்கள், சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, தினமும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் கடந்த  24 நாட்களுக்கு பிறகு சென்னையில் பெட்ரோல், டீசல் விலை 2வது நாளாக குறைக்கப்பட்டுள்ளது.

    சென்னையில் 24 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை மாற்றம் ஏதுமின்றி விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று திடீரென பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 16 காசு குறைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 2வது நாளான இன்றும் பெட்ரோல் லிட்டருக்கு 18 காசு குறைந்து 92 ரூபாய் 77 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

    இதேபோல் டீசல் லிட்டருக்கு 19 காசு குறைந்து 86 ரூபாய் 10 காசுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 2 நாட்களில் பெட்ரோல் லிட்டருக்கு 34 காசுகளும், டீசல் லிட்டருக்கு 35 காசுகளும் குறைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    அதேபோல டெல்லியில் பெட்ரோல் விலை 0.19 சதவீதம் குறைந்து லிட்டருக்கு 90.99 ரூபாயாகவும் , டீசல் 0.2சதவீதம் குறைந்து 81.3 ரூபாயாகவும்   குறைந்துள்ளது.

    இனி வரக்கூடிய நாட்களிலும் அதன் விலை சற்று குறைய வாய்ப்பு இருப்பதாகவே பேசப்படுகிறது.

    மேலும் படிக்க... Horoscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்! (மார்ச் 25, 2021)



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: