Home /News /business /

Petrol-Diesel Price | இன்று மாற்றமில்லாமல் தொடரும் பெட்ரோல், டீசல் விலை

Petrol-Diesel Price | இன்று மாற்றமில்லாமல் தொடரும் பெட்ரோல், டீசல் விலை

பெட்ரோல்-டீசல் விலை

பெட்ரோல்-டீசல் விலை

சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 96.23 ரூபாய், டீசல் லிட்டருக்கு 90.38 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்வே, பெட்ரோல், டீசல் விலையேற்றத்துக்கு காரணம் என மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

    நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை கணிசமாக உயர்ந்து வருகிறது. சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் 96 ரூபாய் 23 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் 90 ரூபாய் 38 காசுகளுக்கும் விற்பனையானது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பெட்ரோல் ஒரு லிட்டர் 101 ரூபாய் 52 காசுகளுக்கு விற்பனையானது. ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்கா நகர் மாவட்டத்தில் அதிகபட்சமாக ஒரு லிட்டர் பெட்ரோல் 106 ரூபாய் 37 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டது.

    இந்நிலையில், ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோல், டீசல் விலையை கொண்டு வருவது தமது விருப்பம் எனவும், எனினும் அதற்கான அதிகாரம் ஜிஎஸ்டி கவுன்சிலுக்குதான் உள்ளது என்றும் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். கச்சா எண்ணெய் விலை குறையும் போது பெட்ரோல், டீசல் விலை குறையும் எனவும், அவர் தெரிவித்துள்ளார்.

    மேலும் படிக்க...புதுச்சேரியில் இன்று (08-06-2021) முக்கிய பகுதிகளில் மின்தடை

    எரிபொருட்கள் விலை உயர்வுக்கு காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். வரி வசூலிக்கும் அலைகள் தொடர்ந்து கொண்டே இருப்பதாகவும், பெட்ரோல் நிலையத்தில் பணத்தை செலுத்தும் போது, மோடி தலைமையிலான அரசின் பண வீக்க அதிகரிப்பை காண முடியும் எனவும் ராகுல் விமர்சித்துள்ளார்.

    இந்நிலையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமின்றி அதே விலையில் விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Petrol Diesel Price hike

    அடுத்த செய்தி