Petrol-Diesel Price | 5 நாட்களாக தொடர்ந்து ஒரே விலையில் நீடிக்கும் பெட்ரோல், டீசல் விலை...

Petrol-Diesel Price | 5 நாட்களாக தொடர்ந்து ஒரே விலையில் நீடிக்கும் பெட்ரோல், டீசல் விலை...

மாதிரி படம்

சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 92.58 ரூபாய், டீசல் லிட்டருக்கு 85.88 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

  • Share this:
    பொதுத்துறையைச் சேர்ந்த, பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் நிறுவனம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய மூன்று நிறுவனங்கள், சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, தினமும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் கடந்த பிப்ரவரி மாதம் 27-ந் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் 93 ரூபாய் 11 காசுக்கும், டீசல் 86 ரூபாய் 45 காசுக்கும் விற்பனை ஆனது. அதன்பின்னர், பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் அதே விலையில் நீடித்து வந்தது. 

    இதற்கிடையில் சில தினங்களுக்கு முன் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு தலா 16 காசு குறைந்திருந்தது. கிட்டத்தட்ட 4 மாதங்களுக்கு பிறகு, அதன் விலை குறைந்து காணப்பட்டது. இதைத் தொடர்ந்து சென்னையில் கடந்த 5 நாட்களாக விலையில் எந்த மாற்றமும் இன்றி பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுகிறது.

    மேலும் படிக்க... அசாம், மேற்கு வங்கத்தில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது...

    அதன்படி சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.92.58க்கும், டீசல் விலை ரூ.85.88க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: