Petrol-Diesel Price | சென்னையில் இன்றைய (ஏப்ரல் 26-2021) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

Petrol-Diesel Price | சென்னையில் இன்றைய (ஏப்ரல் 26-2021) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

மாதிரி படம்

சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று (ஏப்ரல் 26-2021) மாற்றம் எதுவும் இன்றி நேற்றைய விலைக்கே விற்பனை செய்யப்படுகிறது.

  • Share this:
    பொதுத்துறையைச் சேர்ந்த, பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் நிறுவனம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய மூன்று நிறுவனங்கள், சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, தினமும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து வருகின்றன.

    இதில் பெட்ரோல், டீசல் விலை சமீபகாலமாக அதிரடியான மாற்றங்களை கண்டு வருகிறது. இதனால் பெரும்பாலும் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாக நேரிடுகிறது. பெட்ரோல் டீசல் விலையானது சிறிதளவில் இறக்கம் ஏற்பட்டு அதிரடியாக ஏற்றம் கண்டுவருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த 11 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 92.43 ரூபாய், டீசல் லிட்டர் 85.75 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதே விலையில் இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.

    மேலும் படிக்க... ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசே ஏற்று நடத்த வேதாந்தா நிறுவனம் எதிர்ப்பு..

     



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: