Petrol-Diesel Price | பெட்ரோல், டீசல் விலை: இன்றைய (ஏப்ரல் 1 - 2021) நிலவரம் என்ன?

Petrol-Diesel Price | பெட்ரோல், டீசல் விலை: இன்றைய (ஏப்ரல் 1 - 2021)  நிலவரம் என்ன?

பெட்ரோல் விற்பனை நிலையம்

சென்னையில் இன்று (ஏப்ரல் 1 - 2021) பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி நேற்றைய விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

  • Share this:
    பொதுத்துறையைச் சேர்ந்த, பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் நிறுவனம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய மூன்று நிறுவனங்கள், சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, தினமும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் கடந்த பிப்ரவரி மாதம் 27-ந் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் 93 ரூபாய் 11 காசுக்கும், டீசல் 86 ரூபாய் 45 காசுக்கும் விற்பனை ஆனது. அதன்பின்னர், பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் அதே விலையில் நீடித்து வந்தது. 

    இதற்கிடையில் சில தினங்களுக்கு முன் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு தலா 16 காசு குறைந்திருந்தது. கிட்டத்தட்ட 4 மாதங்களுக்கு பிறகு, அதன் விலை குறைந்து காணப்பட்டது. இதைத் தொடர்ந்து சென்னையில் கடந்த 4 நாட்களாக விலையில் எந்த மாற்றமும் இன்றி பெட்ரோல், டீசலின் விலை நேற்று முன்தினம் சற்று குறைந்தது.

    மேலும் படிக்க... அசாம், மேற்கு வங்கத்தில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது...

    இதையடுத்து கடந்த 2 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி அதே விலையில் நீடிக்கிறது. அதன்படி சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.92.58க்கும், டீசல் விலை ரூ.85.88க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: