Petrol-Diesel Price | சென்னையில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு... இன்று என்ன விலை தெரியுமா?

Petrol-Diesel Price | சென்னையில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு... இன்று என்ன விலை தெரியுமா?

பெட்ரோல் விற்பனை நிலையம்

சென்னையில் பெட்ரோல் விலை 15 காசுகள் குறைந்து லிட்டர் 85.43 ரூபாய்க்கும், டீசல் விலை 13 காசுகள் குறைந்து 85.75 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது

  • Share this:
    பொதுத்துறையைச் சேர்ந்த, பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் நிறுவனம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய மூன்று நிறுவனங்கள், சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, தினமும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து வருகின்றன.

    இதில் பெட்ரோல், டீசல் விலை சமீபகாலமாக அதிரடியான மாற்றங்களை கண்டு வருகிறது. இதனால் பெரும்பாலும் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாக நேரிடுகிறது. பெட்ரோல் டீசல் விலையானது சிறிதளவில் இறக்கம் ஏற்பட்டு அதிரடியாக ஏற்றம் கண்டுவருவது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் சென்னையில் இன்று பெட்ரோல் விலை நேற்றைய விலையிலிருந்து 15 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.92.43ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் டீசல் விலையும் நேற்றைய விலையிலிருந்து 13 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.85.75 என்ற விலையில் விற்கப்பட்டு வருகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை கடந்த சில தினங்களாக மாற்றமில்லாமல் இருந்து வந்தது. இந்நிலையில் இன்று விலை குறைப்பு நிகழ்ந்துள்ளது மக்களிடையே சற்று நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

    மேலும் படிக்க... குறைந்த வட்டியில் பாதுகாப்பான கடன்பெற இதோ 4 வழிகள்!



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: