• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • ஜிஎஸ்டியின் கீழ் பெட்ரோலைக் கொண்டு வந்தால் லிட்டர் ரூ.75 தான், அரசுக்கு மனமில்லை: பொருளாதார வல்லுநர்கள் கருத்து

ஜிஎஸ்டியின் கீழ் பெட்ரோலைக் கொண்டு வந்தால் லிட்டர் ரூ.75 தான், அரசுக்கு மனமில்லை: பொருளாதார வல்லுநர்கள் கருத்து

பெட்ரோல், டீசல்

பெட்ரோல், டீசல்

சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி-யின் கீழ் பெட்ரோலைக் கொண்டு வந்தால் லிட்டருக்கு ரூ.75 என்று குறையும், ஆனால் அரசுக்கு ஜிஎஸ்டியின் கீழ் பெட்ரோலைக் கொண்டு வர மனம்தான் இல்லை என்று எஸ்பிஐ பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

  • Share this:
    சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி-யின் கீழ் பெட்ரோலைக் கொண்டு வந்தால் லிட்டருக்கு ரூ.75 என்று குறையும், ஆனால் அரசுக்கு ஜிஎஸ்டியின் கீழ் பெட்ரோலைக் கொண்டு வர மனம்தான் இல்லை என்று எஸ்பிஐ பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

    ஜிஎஸ்டிக்குள் டீசலைக் கொண்டு வந்தால் லிட்டர் ரூ.68 தான் இருக்கும், மத்திய மாநில அரசுகளுக்கு வருவாய் இழப்பும் ரூ.1 லட்சம் கோடியாக இருக்கும். அதாவது ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியான ஜிடிபியில் வருவாய் இழப்பு 0.4% தான் என்று உலக கச்சா விலை 60 டாலர்கள் என்ற கணக்கீட்டின் அடிப்படையில் ஆய்வாளர்கள் இந்த கணக்கீட்டை மேற்கொண்டனர். அதே போல் டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு ரூ.73 என்று இருந்தாலும் இந்த விலைகுறைப்பு சாத்தியமே என்கின்றனர்.

    தற்போது மாநிலத்துக்கு மாநிலம் மதிப்புக் கூட்டு வரி மாறுவதால் ஒவ்வொரு மாநிலத்திலும் பெட்ரோல், டீசல் விலை மாறுபடுகிறது. மத்திய அரசும் தீர்வை மற்றும் செஸ் போடுவதால் சில மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூ.100-ஐ தொட்டது.

    இந்நிலையில் எஸ்பிஐ பொருளாதார வல்லுநர்கள், பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வருவது என்பது இன்னும் முடிவு பெறாத திட்டமாகவே உள்ளது என்கின்றனர். ஆனால் வருவாய் இழப்பை மனதில் கொண்டு பெட்ரோல் டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர மத்திய அரசு யோசிக்கிறது. மனம் வரவில்லை என்கின்றனர் இந்த ஆய்வாளர்கள்.

    மாநிலங்களில் தற்போது மதிப்புக் கூட்டு வரி, சர்சார்ஜ், செஸ் என்று தங்கள் தேவைக்கேற்ப வரி விதிக்கின்றனர். இதோடு பெட்ரோலியம் டிரான்ஸ்போர்ட் கட்டணம், டீலர் கமிஷன் மத்திய அரசின் தீர்வை ஆகியவை பெட்ரோல், டீசல் விலை சுமையை அதிகரிக்கின்றன. டிரான்ஸ்போர்ட்டேஷன் கட்டணம் டீசலுக்கு ரூ.7.25, பெட்ரோலுக்கு ரூ.3.82 என்றும் டீசலுக்கான டீலர் கமிஷன் ரூ.2.53 என்றும் பெட்ரோலுக்கான டீலர் கமிஷன் ரூ.3.67, பெட்ரோலுக்கு செஸ் ரூ.30-ம் டீசலுக்கு ரூ.20ம் என்று வைத்துக் கொண்டு ஜிஎஸ்டி கட்டணம் 28% என்று வைத்துக் கொண்டு கணக்கிட்டால் பெட்ரோல் விலை ரூ.75 என்று வந்தடைந்துள்ளனர்.

    டீசல் நுகர்வு 15% பெட்ரோல் நுகர்வு 10%-ம் அதிகரிக்கும். இதை வைத்துப் பார்த்தால் ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல் டீசலைக் கொண்டு வந்தால் ரூ.1 லட்சம் கோடியே இழப்பு ஏற்படும். அதாவது ஜிடிபியில் 0.4% தான்.

    கச்சா எண்ணெய் விலை 1 டாலர் அதிகரித்தால் பெட்ரோல் விலை 50 காசுகளும் டீசல் விலை ரூ.1.50ம் உயரும். மாநிலங்களுக்கு தற்போது வரி அதிகபட்சமாக வருவாய் தரும் ஒன்றாகும். ஆகவே ஜிஎஸ்டிக்குள் கொண்டு வந்தால் மாநிலங்களின் வருவாய் குறையும்.

    ஆனால் இதே கணக்கீட்டின்படி கச்சா விலை 10 டாலர்கள் குறைந்தால் மாநிலங்கள் ரூ.18,000 கோடி வரை மிச்சம் பிடிக்க முடியும். அதாவது இதன் பயனை மக்களுக்கு அளிக்காமல் அடிப்படை விலையில் வைத்திருதால் ரூ.18,000 கோடி வரை சேமிக்கலாம்

    “எனவே நாங்கள் அரசுக்குப் பரிந்துரைப்பது என்னவெனில் எண்ணெய் உறுதிப்படுத்தல் நிதியை உருவாக்கி வருவாய் இழப்பு ஏற்படும் போது ஈடுகட்ட பயன்படுத்தலாம். எனவே பெட்ரோல் விலை நுகர்வோரை பாதிக்காமலே இதைச் செய்ய முடியும்” என்று கூறுகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: