Petrol Diesel Prices : தமிழகத்தில் புதிய உச்சம்...சதமடித்த பெட்ரோல் விலை!

மாதிரி படம்

மும்பையில் பெட்ரோல் விலை, 100 ரூபாயை தாண்டியுள்ளது. அங்கு ஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாய் 19 காசுகளுக்கும், ஒரு லிட்டர் டீசல் 92 ரூபாய் 17 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

  • Share this:
    தமிழகத்தில் புதிய உச்சமாக பெட்ரோல் விலை 96 ரூபாயை நெருங்கி உள்ளது. மும்பை, ஜெய்பூர், போபால் நகரங்களில் பெட்ரோல் விலை சதமடித்துள்ளது.

    பொதுத்துறையைச் சேர்ந்த பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் நிறுவனம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய மூன்று நிறுவனங்கள், சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, தினமும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து வருகின்றன. இந்தநிலையில் மீண்டும் பெட்ரோல் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

    அதன்படி சென்னையில் பெட்ரோலின் விலை லிட்டர் ஒன்றுக்கு 23 காசுகள் உயர்ந்து, 95 ரூபாய் 51 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் லிட்டருக்கு 26 காசுகள் அதிகரித்து 89 ரூபாய் 65 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த மாதத்தில் மட்டும் பெட்ரோலின் விலை 2 ரூபாய் 92 காசுகளும், டீசலின் விலை 3 ரூபாய் 75 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளது.

    ALSO READ | கொரோனா தடுப்பூசிகளுக்கு கமிஷன் வாங்கிய பாஜக எம்.எல்.ஏ. - விஸ்வரூபம் எடுக்கும் விவகாரம்

    இதேபோல், மும்பையில் பெட்ரோல் விலை, 100 ரூபாயை தாண்டியுள்ளது. அங்கு ஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாய் 19 காசுகளுக்கும், ஒரு லிட்டர் டீசல் 92 ரூபாய் 17 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. தலைநகர் டெல்லியிலும், பெட்ரோல் விலை உயர்ந்து உள்ளது. டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் 93 ரூபாய் 94 காசுகளுக்கும், டீசல் லிட்டர், 84 ரூபாய் 89 காசுகளுக்கும் விற்பனையாகி வருகிறது.

    இதேபோல், கொல்கத்தாவிலும் ஒரு லிட்டர் பெட்ரோல் 93 ரூபாய் 97 காசுகளுக்கும், டீசல் 87 ரூபாய் 74 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் ஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாய் 44 காசுகளுக்கும், மத்திய பிரதேச மாநிலம் போபாலில் 102 ரூபாய் நான்கு காசுகளுக்கு பெட்ரோல் விற்பனையாகிறது.

    ALSO READ | எச்.டி.எப்.சி வங்கிக்கு ரூ.10 கோடி அபராதம்.. ரிசர்வ் வங்கி உத்தரவு..

    தேர்தலுக்குப் பின், கடந்த 4 ஆம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. next மாநிலங்களுக்கு ஏற்ப வரிவிதிப்பு உயர்த்தப்பட்டுள்ளது, கச்சா எண்ணெய் சந்தையில் நிலவும் மாற்றங்களால் விலையேற்றம் ஏற்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sankaravadivoo G
    First published: