பெட்ரோல், டீசல் விலை எங்கள் கைகளில் இல்லை - மத்திய பெட்ரோலிய அமைச்சர்
பெட்ரோல், டீசல் விலை எங்கள் கைகளில் இல்லை - மத்திய பெட்ரோலிய அமைச்சர்
பெட்ரோல், டீசல் விலை
உக்ரைன் - ரஷ்யா போரினால் கச்சா விலை பயங்கரமாக உயர்ந்து வரும் நிலையில் ஏற்கெனவே இந்தியாவில் பெட்ரோல் விலை ரூ.8 குறைவாக விற்கப்பட்டு வருகிறது என்று கூறப்படும் நிலையில் 5 மாநில தேர்தல் முடிந்து விட்டபடியால் பெட்ரொல் டீசல் விலை நிச்சயம் உயர்த்தப்பட்டு லிட்டருக்கு ரூ.110 வரை செல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் - ரஷ்யா போரினால் கச்சா விலை பயங்கரமாக உயர்ந்து வரும் நிலையில் ஏற்கெனவே இந்தியாவில் பெட்ரோல் விலை ரூ.8 குறைவாக விற்கப்பட்டு வருகிறது என்று கூறப்படும் நிலையில் 5 மாநில தேர்தல் முடிந்து விட்டபடியால் பெட்ரொல் டீசல் விலை நிச்சயம் உயர்த்தப்பட்டு லிட்டருக்கு ரூ.110 வரை செல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி பெட்ரோல் டீசல் விலைகள் தங்கள் கையில் இல்லை, பெட்ரோலிய நிறுவனங்கள் கையில்தான் உள்ளது என்று கூறியுள்ளார்.
தேர்தல் நேரம் என்றால் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாமல் கட்டுப்பாட்டுடன் இருக்கும் பொதுத்துறை நிறுவனங்கள் அதன் பிறகு விலையை உயர்த்தும் போது அதற்குக் காரணம், கச்சா விலை உயர்வு, உக்ரைன் போர் என்று கூறிவிட்டு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திவிடும் என்று பொருளாதார நிபுணர்கள் சாடிவரும் நிலையில் 5 மாநில தேர்தலை முன்னிட்டு பெட்ரோல் டீசல் விலைகள் 2021 நவம்பர் முதல் உயர்த்தப்படாமல் இருந்தது.
கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 81 டாலர்களிலிருந்து இப்போது ரூ.140 டாலர்களாக அதிகரித்துள்ளது. எனவே பெட்ரோல் டீசல் விலை உயர்வை நல்ல வேளையாக 5 மாநில தேர்தல்தான் தடுத்து நிறுத்தி வந்தது, இப்போது தேர்தல் முடிந்து விட்ட படியால் பொதுத்துறை நிறுவனங்கள் விட்டதைப் பிடிக்க நிச்சயம் பெட்ரோல் டீசல் விலையை ரூ10 வரை உயர்த்தும் என்றே இந்தத் துறை சார்ந்த நிபுணர்கள் கருதுகின்றனர்.
மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்திப் சிங் பூரியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதில் அளித்த அவர், “பெட்ரோல் டீசல் விலையை நாங்கள் கட்டுப்படுத்தவும் இல்லை, எனவே விலை உயர்வு அல்லது குறைப்பு எதுவாக இருந்தாலும் அது எங்கள் கைகளில் இல்லை, மத்திய அரசுதான் பெட்ரோல் டீசல் விலையைத் தீர்மானிக்கிறது என்று பேசுவது தவறு.
நாட்டுக்கான பெட்ரோல், டீசல் தேவையை நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும். தட்டுப்பாடு ஏதும் ஏற்படாது என்பதற்கு உறுதிதருகிறேன். நமது தேவையில் 85 சதவீதத்தை இறக்குமதி மூலம்தான் நிறைவேற்றுகிறோம், எரிவாயுவில் 65 சதவீதம் இறக்குமதி செய்கிறோம். மக்கள் நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு முடிவெடுக்கும் என்றார் ஹர்திப் சிங் பூரி.
Published by:Muthukumar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.