Petrol Diesel Prices | பெட்ரோல், டீசல் விலை... இன்றைய நிலவரம் என்ன தெரியுமா?

பெட்ரோல்-டீசல் விலை

ஜுன் மாதத்தில் இதுவரை 12 முறை விலை அதிகரித்துள்ள நிலையில், இன்று சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. 

  • Share this:
    தமிழகத்தில் பெட்ரோல், டீசலின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதனால் வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். அதன்படி, கடந்த மே மாதத்தில் மட்டும் 19 முறை எரிபொருள் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனிடையே மாநிலங்களின் வரிவிதிப்பு காரணமாக ஒவ்வொறு மாநிலங்களிலும் பெட்ரோல் , டீசல் விலையில் வித்தியாசம் காணப்படுகிறது.

    இதன் காரணமாக ராஜஸ்தான், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்கள் மட்டுமல்லாது தென் மாநிலங்களான ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் ஏற்கெனவே பெட்ரோலின் விலை ரூ.100 ஐ கடந்துள்ளது. தற்போது, தமிழ்நாட்டிலும் பெட்ரோலின் விலை 100 ரூபாயை நெருங்கி வருகிறது. தற்போதைய விலையேற்றம் தொடர்ந்தால் தமிழகத்திலும் ஓரிரு நாளில் பெட்ரோலின் விலை 100 ரூபாயைக் கடந்துவிடும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    இந்நிலையில்  சென்னையில் விலை மாற்றமின்றி பெட்ரோல் விலை ரூ.98.65க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் லிட்டருக்கு ரூ.92.83க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஜுன் மாதத்தில் இதுவரை 12 முறை விலை அதிகரித்துள்ள நிலையில், இன்று சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. தமிழகத்தின் பிற மாவட்டங்களில் சற்று ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.

     

    மேலும் படிக்க... தஞ்சாவூரில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த துாக்கு மேடையை இடிக்க மக்கள் எதிர்ப்பு...

    அதேபோல மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ 103.63 ஆகவும், டீசல் விலை ரூ 95.72 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. தலைநகர் டெல்லியில், ஒரு லிட்டர் பெட்ரோல் சில்லறை விற்பனைக்கு ரூ 97.50 ஆகவும், டீசல் ரூ 88.23 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. கொல்கத்தாவில், தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 97.38 ஆகவும், டீசல் லிட்டருக்கு        ரூ 91.08ஆகவும் விற்கப்படுகிறது.























    Delhi 97.50 88.23
    Mumbai 103.63 95.72
    Chennai 98.65 92.83
    Kolkata 97.38 91.08


    Published by:Vaijayanthi S
    First published: