• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • Petrol-Diesel Price | பெட்ரோல், டீசல் 6-வது நாளாக விலை மாற்றமின்றி விற்பனை..

Petrol-Diesel Price | பெட்ரோல், டீசல் 6-வது நாளாக விலை மாற்றமின்றி விற்பனை..

பெட்ரோல் விற்பனை நிலையம்

பெட்ரோல் விற்பனை நிலையம்

சென்னையில் இன்று 6-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

  • Share this:
    பொதுத்துறையைச் சேர்ந்த, பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் நிறுவனம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய மூன்று நிறுவனங்கள், சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, தினமும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் கடந்த 5 நாட்களாக பெட்ரோல் லிட்டர் 93.11 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 86.45 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் 6-வது நாளாக இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி அதே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    புதுச்சேரியிலும் பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து மாற்றம் இல்லாமல் உள்ளது. இன்று பெட்ரோல் ஒரு லிட்டர் விலை 91.34 ரூபாயாகவும், டீசல் விலை ஒரு லிட்டர் 84.80 ரூபாயகவும் விற்பனை செய்யப்படுகிறது.

    புதுடெல்லி பெட்ரோல் விலை இன்று 91.17 ரூபாயாகவும் டீசல் விலை 81.47 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. ஆந்திரா பெட்ரோல் விலை இன்று 87.24 ரூபாயாகவும் டீசல் விலை 80.21 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

    மேலும் படிக்க... பெட்ரோல், டீசல் விலை மேலும் அதிகரிக்கும் அபாயம்... காரணம் என்ன?



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: