ஹோம் /நியூஸ் /வணிகம் /

Petrol Diesel Prices | சென்னையில் சதத்தை நெருங்கிய பெட்ரோல் விலை... இன்றைய நிலவரம் என்ன?

Petrol Diesel Prices | சென்னையில் சதத்தை நெருங்கிய பெட்ரோல் விலை... இன்றைய நிலவரம் என்ன?

பெட்ரோல் பங்க்

பெட்ரோல் பங்க்

சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.99.80-க்கும், ஒரு லிட்டர் டீசல் லிட்டர் ரூ.93.72-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  தமிழகத்தில் பெட்ரோல், டீசலின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதனால் வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். அதன்படி, ஜுன் மாதத்தில் இதுவரை 12 முறை விலை அதிகரித்துள்ள நிலையில், இன்று சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. இதனிடையே மாநிலங்களின் வரிவிதிப்பு காரணமாக ஒவ்வொறு மாநிலங்களிலும் பெட்ரோல் , டீசல் விலையில் வித்தியாசம் காணப்படுகிறது.

  இதன் காரணமாக ராஜஸ்தான், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்கள் மட்டுமல்லாது தென் மாநிலங்களான ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் ஏற்கெனவே பெட்ரோலின் விலை ரூ.100 ஐ கடந்துள்ளது. தற்போது, தமிழ்நாட்டிலும் பெட்ரோலின் விலை 35 மாவட்டங்களில் 100 ரூபாயை தொட்டுள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

   சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.99.80-க்கும், ஒரு லிட்டர் டீசல் லிட்டர் ரூ.93.72-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி நேற்றைய விலைக்கே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

  மேலும் படிக்க...தமிழகத்தின் புதிய டிஜிபி சைலேந்திரபாபு கடந்துவந்த பாதை

  அதேபோல மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ 104.90 ஆகவும், டீசல் விலை ரூ 93.72 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. தலைநகர் டெல்லியில், ஒரு லிட்டர் பெட்ரோல் சில்லறை விற்பனைக்கு ரூ 98.81 ஆகவும், டீசல் ரூ 89.18ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. கொல்கத்தாவில், தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 98.64 ஆகவும், டீசல் லிட்டருக்கு        ரூ 92.03 ஆகவும் விற்கப்படுகிறது.

  நகரம்பெட்ரோல்டீசல்
  Delhi98.8189.18
  Mumbai104.9093.72
  Chennai99.8093.72
  Kolkata98.6492.03

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Petrol Diesel Price hike