• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • பெட்ரோல், டீசல் விலை குறைகிறது?- லிட்டருக்கு ரூ. 5 வரை குறைக்கப்படலாம்- பேங்க் ஆஃப் அமெரிக்கா கணிப்பு

பெட்ரோல், டீசல் விலை குறைகிறது?- லிட்டருக்கு ரூ. 5 வரை குறைக்கப்படலாம்- பேங்க் ஆஃப் அமெரிக்கா கணிப்பு

மாதிரி படம்

மாதிரி படம்

இந்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.5 வரை குறைக்கலாம் என்று பேங்க் ஆஃப் அமெரிக்க ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். ஏனெனில் உலக கச்சா விலை பேரலுக்கு சராசரி 60 டாலர்களாக உள்ளது.

  • Share this:
    இந்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.5 வரை குறைக்கலாம் என்று பேங்க் ஆஃப் அமெரிக்க ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். ஏனெனில் உலக கச்சா விலை பேரலுக்கு சராசரி 60 டாலர்களாக உள்ளது.

    “மத்திய அரசின் நிதிப்பற்றாக்குறையை நிதியாண்டு 2022-ல் ஜிடிபி 7.5%-ல் 30 அடிப்படைப் புள்ளிகள் அதிகரிக்கிறோம். அதாவது பெட்ரோல், டீசல் விலையை லிட்டர்க்கு ரூ.5 வரை மத்திய அரசு குறைக்கும். இதன் மூலம் மத்திய அரசின் வருவாய் ரூ.71,760 கோடி குறையும்.

    இந்தியாவுக்கு தற்போது கச்சா எண்ணெய் பேரல் ஒன்றிற்கு 62 டாலர்களாக உள்ளது. 2021 தொடக்கத்தில் இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 19 டாலர்கள் முதல் 44 டாலர்கள் வரை உள்ளன. கச்சா இறக்குமதி செலவு 57% குறைந்துள்ளது.

    பெட்ரோல் டீசல் விலைகளை இந்தியா ரூ.5 குறைப்பதன் மூலம் பெருகும் தேவைகள், அதிகரிக்கும் நுக்ரவின் காரணமாக 2022 நிதியாண்டில் இந்திய வளர்ச்சி 9% ஆக இருக்கும் என்று கணிப்பதாக பேங்க் ஆஃப் அமெரிக்கா ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    புதனன்று டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.90.93 ஆக உள்ளது. ஒருமாதத்துக்குள் லிட்டருக்கு ரூ.5.23 ஏறியுள்ளது. மத்திய அரசின் டீசல் மீதான வரி லிட்டருக்கு 31.83 ஆகவும் பெட்ரோலுக்கான வரி லிட்டருக்கு ரூ.32.98 ஆக உள்ளது. கடந்த மார்ச் மற்றும் மே 2020-ல் சர்சார்ஜ் மற்றும் செஸ் ஆகியவை பெட்ரோல் டீசல் மீது முறையே ரூ.13 மற்றும் ரூ.16 அதிகரிக்கப்பட்டது.

    இது தவிர பெட்ரோல் டீசல் மீது மாநிலங்கள் விதிக்கும் மதிப்புக் கூட்டு வரியும் உள்ளது. ,மாநில அரசு மத்திய அரசுக்கு சம்பாதித்துக் கொடுக்கும் ஜிஎஸ்டி வரியையும் அவர்கள் பார்த்துக் கொடுத்தால்தான் உண்டு என்பதால் மாநில வருவாய் டாஸ்மாக், பெட்ரோல் டீசல், மற்றும் பத்திரப்பதிவு துறைகளுக்கு சுருக்கப்பட்டு விட்டது.

    இந்நிலையில் ஏற்கெனவே அதிக விலை விற்கும் பெட்ரோல் டீசல் மீது மாநில அரசுகள் மதிப்புக் கூட்டு வரியை அதிகரிக்க முடியாது, அதே போல் குறைத்தால் வருவாய் இழப்பு ஏற்படும்.

    இப்படிப்பட்ட சிக்கல்களைத் தவிர்க்க மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலைகள் மீதான வரியை ரூ.5 குறைத்தால் பெட்ரோல் விலை டீசல் விலை குறையும் இதனால் நுகர்வு அதிகரிக்கும் வளர்ச்சி ஏற்படும் என்கிறத் பேங்க் ஆஃப் அமெரிக்கா.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: