• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • பெட்ரோல், டீசல் விலை 13-வது நாளாக குறைவு!

பெட்ரோல், டீசல் விலை 13-வது நாளாக குறைவு!

பெட்ரோல், டீசல் விலை

பெட்ரோல், டீசல் விலை

சர்வதேச சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 31 டாலராக சரிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

  • Share this:
    பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 13-வது நாளாக இன்றும் குறைந்துள்ளது.

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பெட்ரோல், டீசல் பயன்பாடு குறைந்ததால் கச்சா எண்ணெய் விலையும் குறைந்தது. இதனால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை கடந்த இரண்டு வாரமாக படிப்படியாக குறைந்து வருகிறது.

    இதன்படி, சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 31 காசுகள் குறைந்து 73 ரூபாய் 2 காசாக உள்ளது. கடந்த மாதம் 29-ம் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 74 ரூபாய் 68 காசுகளாக இருந்த நிலையில், தற்போது வரை ஒரு ரூபாய் 66 காசுகள் வரை குறைந்துள்ளது.

    இதேபோன்று டீசல் விலையும் லிட்டருக்கு 27 காசுகள் குறைந்து 66 ரூபாய் 48 காசாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒரு லிட்டர் டீசல் கடந்த மாதம் 27-ம் தேதி 68 ரூபாய் 27 காசுக்கு விற்கப்பட்டது. டீசல் விலை கடந்த 13 நாட்களில் ஒரு ரூபாய் 79 காசு குறைந்துள்ளது.

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 29 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 31 டாலராக சரிந்துள்ளது. இருப்பினும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை பெரிய அளவில் குறைக்கப்படாமல் உள்ளது. கச்சா எண்ணெய் விலையை கட்டுக்குள் வைப்பதற்காக உற்பத்தியை குறைக்கும்படி ஒபெக் கூட்டமைப்பு விடுத்த கோரிக்கையை நிராகரித்துவிட்ட ரஷ்யாவிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சவுதி அரேபிய அரசு கச்சா எண்ணெய் விலையை அதிரடியாகக் குறைந்துள்ளது

    இதனால், பெட்ரோல், டீசல் விலை மேலும் குறையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி தொடரும் பட்சத்தில், நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் இறக்குமதி செலவினம் 10 விழுக்காடு வரை குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

     

    Also see...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: