அமெரிக்கா- ஈரான் பிரச்னையால் தொடர்ந்து அதிகரிக்கும் பெட்ரோல், டீசல் விலை!

இந்தியாவில் சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்தைப் பொறுத்து பெட்ரோல், டீசல் விலைப்பட்டியல் தினமும் புதுப்பிக்கப்படும்.

அமெரிக்கா- ஈரான் பிரச்னையால் தொடர்ந்து அதிகரிக்கும் பெட்ரோல், டீசல் விலை!
பெட்ரோல், டீசல் விலை
  • News18
  • Last Updated: January 6, 2020, 1:57 PM IST
  • Share this:
தொடர்ந்து ஐந்தாம் நாளாக இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருகிறது.

மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்காவின் செயல்பாடுகளால் போர் பதற்றம் அதிகரித்துக் காணப்படுகிறது. இதனால் சர்வதேச அளவில் பல பொருளாதார நெருக்கடிகள் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரையில் பெட்ரோல் விலை டெல்லி மற்றும் கொல்கத்தாவில் 15 பைசாவும் சென்னை மற்றும் மும்பையில் 16 பைசாவும் அதிகரித்துள்ளது.

டீசல் விலையும் டெல்லி மற்றும் கொல்கத்தாவில் 17 பைசாவும் மும்பையில் 18 பைசாவும் சென்னையில் 19 பைசாவும் அதிகரித்துள்ளது. சர்வதேச அளவில் எண்ணெய் வர்த்தகத்தின் பாதி மத்திய கிழக்கு நாடுகளில் இருந்தே நடைபெறுகிறது. இதனால் உலக நாடுகள் பலவும் பாதிப்பைச் சந்தித்து வருகின்றன.


கடந்த ஐந்து நாட்களில் இந்தியாவில் மட்டும் பெட்ரோல் விலை, மும்பை மற்றும் கொல்கத்தாவில் 49 பைசாவும் டெல்லியில் 55 பைசாவும் சென்னையில் 52 பைசாவும் அதிகரித்துள்ளது. இந்தியாவில் சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்தைப் பொறுத்து பெட்ரோல், டீசல் விலைப்பட்டியல் தினமும் புதுப்பிக்கப்படும்.

மேலும் பார்க்க: JNU மாணவர்களுக்கு ஆதரவாக மும்பையில் இரவு முழுவதும் மாணவர்கள் போராட்டம்!
First published: January 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்