ஹோம் /நியூஸ் /வணிகம் /

அமெரிக்க- ஈரான் பதற்ற நிலை தணிந்ததால் பெட்ரோல், டீசல் விலை குறைவு!

அமெரிக்க- ஈரான் பதற்ற நிலை தணிந்ததால் பெட்ரோல், டீசல் விலை குறைவு!

கோப்புப் படம்

கோப்புப் படம்

இந்திய பெட்ரோல் மற்றும் டீசல் விலை சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்தின் அடிப்படையில் மாறுதலுக்கு உள்ளானது.

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவி வந்த போர் பதற்றம் சற்றே தணிந்துள்ளதால் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்துள்ளது.

  இன்றைய நிலவரத்தின் அடிப்படையில் இந்தியாவின் முக்கிய நகரங்களில் பெட்ரோல் விலை 10 பைசாவும் டீசல் விலை 5 பைசாவும் விலை குறைந்துள்ளது. டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 75.70 ரூபாயும் மும்பையில் 81.29 ரூபாயும் கொல்கத்தாவில் 78.38 ரூபாயும் சென்னையில் 78.65 ரூபாயும் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

  டீசல் விலை லிட்டருக்கு டெல்லியில் 69.06 ரூபாய்க்கும் மும்பையில் 72.42 ரூபாய்க்கும் பெங்களூருவில் 71.36 ரூபாயும் சென்னையில் 72.98 ரூபாய்க்கும் விற்பனை ஆகி வருகிறது.

  தினந்தோறும் அப்டேட் ஆகும் இந்திய பெட்ரோல் மற்றும் டீசல் விலை சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்தின் அடிப்படையில் மாறுதலுக்கு உள்ளானது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் விலை நிலவரத்தை நிர்ணயிக்கும். இந்தியாவில் தினமும் காலை 6 மணி அளவில் பெட்ரோல், டீசல் விலை அப்டேட் ஆகும்.

  மேலும் பார்க்க: பணக்காரர்களுக்கு அதிக வரி விதிக்க வேண்டும் - பொருளாதார நோபல் வெற்றியாளர் அபிஜித்

  Published by:Rahini M
  First published:

  Tags: Petrol