• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • Petrol Diesel Prices | சென்னையிலும் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டியது...

Petrol Diesel Prices | சென்னையிலும் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டியது...

மாதிரி படம்

மாதிரி படம்

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 100 ரூபாயை கடந்து விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

  • Share this:
    தமிழகத்தில் பெட்ரோல், டீசலின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதனால் வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். அதன்படி, ஜுன் மாதத்தில் இதுவரை 12 முறை விலை அதிகரித்துள்ள நிலையில், சென்னையில் இன்று லிட்டருக்கு 33 காசுகள் உயர்ந்து 100 ரூபாய் 13 காசுகளுக்கு பெட்ரோல் விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலையில் மாற்றம் ஏதுமின்றி நேற்றைய விலையான 93 ரூபாய் 72 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் முதன்முதலில் பெட்ரோல் விலை 100 ரூபாயை கடந்துள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

    இதனிடையே மாநிலங்களின் வரிவிதிப்பு காரணமாக ஒவ்வொறு மாநிலங்களிலும் பெட்ரோல் , டீசல் விலையில் வித்தியாசம் காணப்படுகிறது. இதன் காரணமாக ராஜஸ்தான், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்கள் மட்டுமல்லாது தென் மாநிலங்களான ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் ஏற்கெனவே பெட்ரோலின் விலை ரூ.100 ஐ கடந்துள்ளது. தற்போது, தமிழ்நாட்டிலும் பெட்ரோலின் விலை 35 மாவட்டங்களில் 100 ரூபாயை தொட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மேலும் படிக்க...தமிழகத்தின் புதிய டிஜிபி சைலேந்திரபாபு கடந்துவந்த பாதை

    அதேபோல மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ 105.24 ஆகவும், டீசல் விலை ரூ 96.72 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. தலைநகர் டெல்லியில், ஒரு லிட்டர் பெட்ரோல் சில்லறை விற்பனைக்கு ரூ 99.16 ஆகவும், டீசல் ரூ 89.18ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. கொல்கத்தாவில், தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 99.4ஆகவும், டீசல் லிட்டருக்கு ரூ 92.03 ஆகவும் விற்கப்படுகிறது.




























    நகரம் பெட்ரோல் டீசல்
    Delhi 99.16 89.18
    Mumbai 105.24 96.72
    Chennai 100.13 93.72
    Kolkata 99.4 92.03

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: