Petrol-Diesel Price | தொடர்ந்து 10 நாட்களாக அதிகரித்து வரும் பெட்ரோல் டீசல் விலை: இன்றைய நிலவரம் என்ன?

Petrol-Diesel Price | தொடர்ந்து 10 நாட்களாக அதிகரித்து வரும் பெட்ரோல் டீசல் விலை: இன்றைய நிலவரம் என்ன?

பெட்ரோல், டீசல்

பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது வாகன ஓட்டிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • Share this:
    கடந்த ஒருவார காலமாகவே ஏறுமுகத்தில் உள்ள பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 91.68 ரூபாய், டீசல் லிட்டர் 85.01 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று பெட்ரோல் விலை 30 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு 91.98 ரூபாய் எனவும், டீசல் விலையில் 30 காசுகள் உயர்ந்து 85.31 ரூபாய் எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    இதேபோல புதுச்சேரியில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 91 ரூபாய் 50 காசுகளுக்கும், டீசல் 84 ரூபாய் 99 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகின்றது.

    டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு. 89.88 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. அங்கு டீசல் விலை லிட்டருக்கு. 80.27 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையில், ராஜஸ்தானின் ஸ்ரீகங்கநகர் மாவட்டத்தில் நேற்று பெட்ரோல் விலை லிட்டருக்கு  100 ரூபாயை தாண்டியது.

    மேலும் படிக்க... பெண்ணிடம் பணம்பறிப்பு.. திருடனை பிடித்து மாஸ் காட்டிய நிஜ ஹீரோ

    இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் என்று பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: