• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • Petrol Diesel Prices | தமிழகத்தில் புதிய உச்சத்தில் பெட்ரோல் விலை.. எவ்வளவு தெரியுமா?

Petrol Diesel Prices | தமிழகத்தில் புதிய உச்சத்தில் பெட்ரோல் விலை.. எவ்வளவு தெரியுமா?

பெட்ரோல் விற்பனை நிலையம்

பெட்ரோல் விற்பனை நிலையம்

தமிழகத்தில் புதிய உச்சமாக பெட்ரோல் விலை 97 ரூபாயை நெருங்கி உள்ளது. மும்பை, ஜெய்பூர், போபால் நகரங்களில் பெட்ரோல் விலை சதமடித்துள்ளது.

  • Share this:
    தமிழகத்தில் புதிய உச்சமாக பெட்ரோல் விலை 97 ரூபாயை நெருங்கி உள்ளது. மும்பை, ஜெய்பூர், போபால் நகரங்களில் பெட்ரோல் விலை சதமடித்துள்ளது.

    பொதுத்துறையைச் சேர்ந்த பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் நிறுவனம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய மூன்று நிறுவனங்கள், சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, தினமும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து வருகின்றன. இந்தநிலையில் மீண்டும் பெட்ரோல் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

    அதன்படி சென்னையில் பெட்ரோலின் விலை லிட்டர் ஒன்றுக்கு 23 காசுகள் அதிகரித்து ரூ.96.94-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே சமயம் டீசல் விலை லிட்டருக்கு 28 காசுகள் அதிகரித்து ரூ.91.15-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    கடந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்து ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு, பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் கடந்த 4-ந்தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.96-ஐ கடந்தும், டீசல் கடந்த 1-ந்தேதி ரூ.90-ஐ கடந்தும் விற்பனை ஆனது. அதன் தொடர்ச்சியாக விலை தற்போதுவரை ஏறுமுகத்திலேயே இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும் படிக்க... கரும்பூஞ்சைக்கும் பல் வலிக்கும் என்ன தொடர்பு? 

    இதேபோல், மும்பையில் பெட்ரோல் விலை, 101 ரூபாயை தாண்டியுள்ளது. அங்கு ஒரு லிட்டர் பெட்ரோல் 101 ரூபாய் 76 காசுகளுக்கும், ஒரு லிட்டர் டீசல் 93ரூபாய் 85 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. தலைநகர் டெல்லியிலும், பெட்ரோல் விலை உயர்ந்து உள்ளது. டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் 95 ரூபாய் 56 காசுகளுக்கும், டீசல் லிட்டர், 86 ரூபாய் 47 காசுகளுக்கும் விற்பனையாகி வருகிறது.

    இதேபோல், கொல்கத்தாவிலும் ஒரு லிட்டர் பெட்ரோல் 95 ரூபாய் 52 காசுகளுக்கும், டீசல் 89 ரூபாய் 32 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

     



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: