Petrol-Diesel Price : தொடர்ந்து அதிகரிக்கும் பெட்ரோல், டீசல் விலை! இன்றைய நிலவரம் என்ன?
பெட்ரோல், டீசல் விலை
தமிழகத்தில் பெட்ரோல் விலை இதுவரை இல்லாத வகையில், லிட்டருக்கு 90 ரூபாயைக் கடந்துள்ளது. விலை உயர்வை கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.90.18 ஆக விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், விலை உயர்வை கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை நேற்றைய தினம் 90 ரூபாயை எட்டியது. டீசல் விலை 24 காசு உயர்ந்து 82 ரூபாய் 90 காசாக உயர்ந்தது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தை பொறுத்து, பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன. அதன்படி கடந்த சில நாட்களாகவே பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது.
இந்நிலையில் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ90.18 காசுகளாக அதிகரித்துள்ளது. டீசல் விலை ரூ 83 .18 காசுகளாக அதிகரித்துள்ளது.
அதேபோல டெல்லியில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 87.85ஆகவும், டீசல் லிட்டருக்கு ரூ 78.03 ஆகவும் உள்ளது. மும்பையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 94.36 ஆகவும் , டீசல் லிட்டருக்கு ரூ 84.94 ஆகவும் உள்ளது.
கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால் பெட்ரோல், டீசல் விலை ஏறுமுகமாகியுள்ளது. இதனால் கடும் அதிர்ச்சி அடைந்துள்ள வாகன ஓட்டிகள், பெட்ரோல், டீசல் விலை உயர்வால் கடும் அவதிக்கு ஆளாவதாகவும், விலை உயர்வை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.