Home /News /business /

பெட்ரோல், டீசல் இன்றைய (மே 5-2022) விலை நிலவரம் - 29ஆவது நாளாக இன்றும் மாற்றம் இல்லை

பெட்ரோல், டீசல் இன்றைய (மே 5-2022) விலை நிலவரம் - 29ஆவது நாளாக இன்றும் மாற்றம் இல்லை

பெட்ரோல், டீசல் விலை

பெட்ரோல், டீசல் விலை

Petrol Diesel Price Today : பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தொடர்ந்து 29ஆவது நாளாக இன்றும் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.

    கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், வரலாறு காணாத உச்சமாக டீசல் ரூ.100 கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல பெட்ரோல் விலையும் 110 ரூபாயை கடந்து விற்பனையாகிறது.

    இவ்வாறு எரிபொருட்களின் விலை அதிகரித்ததால், அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயர்ந்து வருகின்றது. இந்நிலையில், ஏப்ரல் 6ஆம் தேதி (புதன் கிழமை) பெட்ரோல் லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து, சென்னையில் 110.85 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து 100.94 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து 29வது நாளாக இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. நேற்று விற்பனை செய்யப்பட்ட அதே விலையில் இன்றும் விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 110.85 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் 100.94 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால், வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் சற்றே நிம்மதி அடைந்துள்ளனர்.

    Must Read : கோட நாடு பங்களாவுக்கு யாரெல்லாம் வந்து செல்வார்கள்? - ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனிடம் 9 மணி நேர விசாரணை

    மாவட்ட வாரியாக பெட்ரோல் விலை நிலவரம்:

    சென்னை - ரூ.110.95

    கோவை - ரூ.111.33

    திருச்சி - ரூ.111.30

    மதுரை - ரூ.111.42

    சேலம் - ரூ.111.64

    அரியலூர் - ரூ.111.84

    கடலூர் - ரூ.112.98

    தருமபுரி - ரூ.112.02

    திண்டுக்கல் - ரூ.111.62

    ஈரோடு - ரூ.111.72

    காஞ்சிபுரம் - ரூ.111.45

    கன்னியாகுமரி - ரூ.111.96

    கரூர் - ரூ.111.30

    கிருஷ்ணகிரி - ரூ.112.33

    நாகப்பட்டினம் - ரூ.112.26

    நாமக்கல் - ரூ.111.45

    நீலகிரி - ரூ.113.01

    பெரம்பலூர் - ரூ.111.75

    புதுக்கோட்டை - ரூ.111.89

    ராமநாதபுரம் - ரூ.112.09

    சிவகங்கை - ரூ.111.92

    தேனி - ரூ.111.75

    தஞ்சாவூர் - ரூ.111.69

    திருவாரூர் - ரூ.111.94

    திருநெல்வேலி - ரூ.111.21

    திருப்பூர் - ரூ.111.81

    திருவள்ளூர் - ரூ.111.01

    திருவண்ணாமலை - ரூ.111.64

    தூத்துக்குடி - ரூ.111.59

    வேலூர் - ரூ.112.61

    விழுப்புரம் - ரூ.113.11

    விருதுநகர் - ரூ.111.87
    Published by:Suresh V
    First published:

    Tags: Petrol, Petrol Diesel Price, Petrol-diesel

    அடுத்த செய்தி