சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன.
இந்நிலையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு இம்மாதம் 21ஆம் தேதி அதிரடியாக குறைத்தது. அதன்படி, டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாயும், பெட்ரோல் விலை 9 ரூபாய் 50 காசுகளும் குறைக்கப்பட்டன. அதன்படி, சென்னையில் லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டது. டீசல் விலை 94 ரூபாய் 24 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, 9ஆவது நாளாக இன்றும் பெட்ரோல்-டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி சென்னையில் இன்று (மே 31-2022) நேற்றையை விலையில் மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் விலை ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்துள்ளது. விலையில் மாற்றம் செய்யப்படாததால் பொதுமக்களும் வாகன ஓட்டிகைளும் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
பெட்ரோல், டீசல் கொள்முதல் நிறுத்தம்
இந்நிலையில், எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து இன்று (மே-31) ஒரு நாள் மட்டும் பெட்ரோல், டீசல் கொள்முதல் செய்யப்போவது இல்லை என தமிழகத்தில் உள்ள பெட்ரோலிய விற்பனை முகவர்கள் அறிவித்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
மாநிலம் முழுவதும் 5 ஆயிரத்து 800 டீலர்கள் உள்ள நிலையில், மத்திய அரசு வரியை குறைக்கும் போதெல்லாம், தங்களிடம் இருப்பு உள்ள பெட்ரோல், டீசலை நஷ்டத்திற்கு விற்பதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.
Must Read : குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனை சென்ற பெண்.. தவறான சிகிச்சையால் உயிரிழப்பு...
இதனை எண்ணெய் நிறுவனங்களுக்கு உணர்த்துவதற்காக இன்று கொள்முதல் செய்யமாட்டோம் என அறிவித்துள்ள டீலர்கள் இதனால், வாகன ஓட்டிகளுக்கு பாதிப்பு இருக்காது எனவும் விளக்கம் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.