Home /News /business /

மே 30 : பெட்ரோல், டீசல் - இன்றைய விலை இதுதான்

மே 30 : பெட்ரோல், டீசல் - இன்றைய விலை இதுதான்

பெட்ரோல்-டீசல்

பெட்ரோல்-டீசல்

Petrol Diesel Price Today : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை 8ஆவது நாளாக இன்றும் விலையில் மாற்றம் இன்றி விற்பனை செய்யப்படுகிறது.

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன.

    இந்நிலையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு மே 21ஆம் தேதி அதிரடியாக குறைத்தது. அதன்படி, டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாயும், பெட்ரோல் விலை 9 ரூபாய் 50 காசுகளும் குறைக்கப்பட்டன. அதன்படி, சென்னையில் லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டது. டீசல் விலை 94 ரூபாய் 24 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து, 8ஆவது நாளாக இன்றும் பெட்ரோல்-டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி சென்னையில் இன்று (மே 27-2022) நேற்றையை விலையில் மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் விலை ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்துள்ளது. விலையில் மாற்றம் செய்யப்படாததால் பொதுமக்களும் வாகன ஓட்டிகைளும் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

    பெட்ரோல், டீசல் கொள்முதல் நிறுத்தம்

    இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலை குறைப்பால் ஏற்பட்ட இழப்பை, எண்ணெய் நிறுவனங்கள் ஈடுசெய்ய வலியுறுத்தி, ‘பங்க்’ உரிமையாளர்கள், நாளை (மே-31) பெட்ரோல், டீசல் கொள்முதல் செய்வதை நிறுத்த போவதாக அறிவித்துள்ளனர்.

    இது குறித்து, தமிழக பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்க தலைவர் முரளி வெயியிட்டுள்ள அறிக்கையில், சில்லரை விற்பனையாளர்களுக்கு, 2017ல் இருந்து இதுவரை விளிம்பு தொகையை அதிகரித்து வழங்கவில்லை. 2017ல், லிட்டர், 60 ரூபாயாக இருந்த பெட்ரோல் தற்போது, 104 ரூபாயாக உள்ளது. டீசல் லிட்டர், 52 ரூபாயில் இருந்து, 96 ரூபாயாக உயர்ந்துள்ளது.

    இதனால், எங்களது நடைமுறை மூலதனம் உயர்ந்து, பெட்ரோலிய பொருட்கள் கொள்முதல் செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. விற்பனையாளர்களுக்கு எண்ணெய் நிறுவனங்கள் விளிம்பு தொகையாக பெட்ரோலுக்கு, 3.06 ரூபாயும், டீசலுக்கு 1.88 ரூபாயும் வழங்குகின்றன. இந்த விளிம்பு தொகையில், 70 சதவீதம் நிர்வாக செலவினங்களுக்கு செலவிடப்படுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    விளிம்பு தொகை கட்டமைப்பு, 2010ல் உள்ள செலவினங்களுக்கான கணக்கீட்டை உள்ளடக்கியது. 13 ஆண்டுகளாகியும் அதே நிலை உள்ளது. மே 21ஆம் தேதி மத்தியஅரசால் குறைத்து அறிவிக்கப்பட்ட சிறப்பு கலால் வரியால், தமிழகத்தில் பெட்ரோல் லிட்டருக்கு, 9.12 ரூபாயும்; டீசல் லிட்டருக்கு, 6.68 ரூபாயும் எண்ணெய் நிறுவனங்கள் குறைத்தன.

    இதனால், அன்று 2 லட்சம் ரூபாய் முதல், 10 லட்சம் ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டது. எனவே, 2021 நவம்பர், மற்றும் இம்மாதம், 21ஆம் தேதி சில்லரை விலை குறைப்பால் ஏற்பட்ட இழப்பை, முதன்மை உரிமையாளர் என்ற அடிப்படையில், எண்ணெய் நிறுவனங்கள் விற்பனையாளர்களுக்கு ஈடுசெய்ய வேண்டும்.

    Must Read : மோசடி ரம்மி... நடிகர்களின் விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் - டிஜிபி சைலேந்திர பாபு

    இதுகுறித்து, எண்ணெய் நிறுவனங்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில், வரும் 31ஆம் தேதி ஒரு நாள் மட்டும், பெட்ரோல், டீசல் கொள்முதல் செய்வதை நிறுத்த உள்ளோம். பொது மக்களுக்கு எவ்வித பாதிப்பும் இன்றி, பெட்ரோல், டீசல் விற்பனை தொடர்ந்து நடக்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Published by:Suresh V
    First published:

    Tags: Petrol, Petrol Diesel Price, Petrol-diesel

    அடுத்த செய்தி