Home /News /business /

மே 26 : பெட்ரோல், டீசல் இன்றைய விலை நிலவரம்

மே 26 : பெட்ரோல், டீசல் இன்றைய விலை நிலவரம்

பெட்ரோல்-டீசல்

பெட்ரோல்-டீசல்

Petrol Diesel Price Today : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றம் இன்றி நேற்று விற்பனை செய்யப்பட்ட அதே விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன.

    இந்நிலையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு சில தினங்களுக்க முன்னர் அதிரடியாக குறைத்தது. அதன்படி, டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாயும், பெட்ரோல் விலை 9 ரூபாய் 50 காசுகளும் குறைக்கப்பட்டன. அதன்படி, சென்னையில் லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கு  டீசல் விலை லிட்டருக்கு 6 ரூபாய் 70 காசுகள் குறைந்து 94 ரூபாய் 24 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டது.

    சென்னையில் இன்று (மே 26-2022) நேற்றைய விலையில் மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் விலை ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில், தமிழக அரசு உடனடியாக பெட்ரோல் விலையை மேலும் 2 ரூபாயும், டீசலுக்கு 4 ரூபாயும் குறைத்து, தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்றும், சமையல் கியாஸ் சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வழங்கப்பட வேண்டும் என்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

    Must Read : பிரதமர் மோடி இன்று மாலை சென்னை வருகிறார் - பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

    மேலும், மே 2020-ல் நிறைவேற்றப்பட்ட ஜிஓவை மாற்றியமைத்து, மாநில மதிப்புக் கூட்டு வரியை அடிப்படை விலையின் சதவீதமாக அமல்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Petrol, Petrol Diesel Price, Petrol-diesel

    அடுத்த செய்தி