Home /News /business /

பெட்ரோல், டீசல் இன்றைய (மே 25-2022) விலை நிலவரம் இதுதான்..!

பெட்ரோல், டீசல் இன்றைய (மே 25-2022) விலை நிலவரம் இதுதான்..!

பெட்ரோல் , டீசல் விலை நிலவரம்

பெட்ரோல் , டீசல் விலை நிலவரம்

Petrol Diesel Price Today : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றம் இன்றி இன்றும் நேற்று விற்பனை செய்யப்பட்ட அதே விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன.

    இந்நிலையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு சில தினங்களுக்க முன்னர் அதிரடியாக குறைத்தது. அதன்படி, டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாயும், பெட்ரோல் விலை 9 ரூபாய் 50 காசுகளும் குறைக்கப்பட்டன. அதன்படி, சென்னையில் லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டது. டீசல் விலை லிட்டருக்கு 6 ரூபாய் 70 காசுகள் குறைந்து 94 ரூபாய் 24 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டது.

    சென்னையில் இன்று (May 25-2022) நேற்றைய விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் விலை ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில், அண்டை நாடான இலங்கையில் எரிபொருள் விலை நேற்று முன்தினம் முதல் மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் 420 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் 400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, போக்குவரத்து கட்டணத்தை இலங்கை தேசிய போக்குவரத்து ஆணைக் குழு உயர்த்தியுள்ளது.

    Must Read : ஆரூத்ரா கோல்டு நிறுவனத்தில் ரெய்டு... 3 கோடியே 41 லட்சம் ரூபாய் பறிமுதல் - சீல் வைத்து நடவடிக்கை

    அதன்படி அங்கே, 19.5 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளதால், பேருந்துகளில் 10 ரூபாயாக இருந்த குறைந்தபட்ச கட்டணம், 32 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதேபோல, ஆட்டோக்களிலும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அங்கே, பல இடங்களில் எரிபொருள் தீர்ந்துவிட்ட நிலையில், எரிபொருளை நிரப்புவதற்காக வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன.
    Published by:Suresh V
    First published:

    Tags: Petrol, Petrol Diesel Price, Petrol-diesel

    அடுத்த செய்தி