Home /News /business /

பெட்ரோல், டீசல் இன்றைய (மே 20-2022) விலை நிலவரம் இதுதான்

பெட்ரோல், டீசல் இன்றைய (மே 20-2022) விலை நிலவரம் இதுதான்

பெட்ரோல், டீசல் விலை

பெட்ரோல், டீசல் விலை

Petrol Diesel Price Today : சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் 44ஆவது நாளாக இன்றும் மாற்றம் இன்றி ஒரே விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன.

    டீசல் விலை வரலாறு காணாத உச்சமாக ரூ.100-ஐ கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல பெட்ரோல் விலையும் 110 ரூபாயை கடந்து விற்பனையாகிறது. எரிபொருட்களின் விலை உயர்வால், அத்தியாவசியப் பொருட்களின் விலையும் நாளுக்கு நாள் தொடர்ந்து உயர்ந்து வருகின்றது.

    கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி (புதன் கிழமை) பெட்ரோல் லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து, சென்னையில் 110.85 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து 100.94 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து 44வது நாளாக இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    நேற்று விற்பனை செய்யப்பட்ட அதே விலையில் இன்றும் விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 110.85 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் 100.94 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்களும் சற்றே நிம்மதி அடைந்துள்ளனர்.

    இந்நிலையில், நேற்று வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 3 ரூபாய் உயர்ந்து சென்னையில் ரூ.1,018.50 க்கு விற்பனையாகிறது. இதேபோல, வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை 8 ரூபாய் உயர்ந்து ரூ.2,507க்கு விற்பனையாகிறது.

    Must Read : திமுகவுக்கு மண்டியிட்டு பழக்கம் இல்லை.. மாநிலத்தின் உரிமைகளை காக்க போராடுகிறோம்.. - திருச்சி சிவா

    இதனால், இல்லத்தரசிகளும் ஹோட்டல், டீ கடை போன்றவற்றின் உரிமையாளர்களும் கலக்கம் அடைந்துள்ளனர். ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக எரிவாயு சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Suresh V
    First published:

    Tags: Petrol, Petrol Diesel Price, Petrol-diesel

    அடுத்த செய்தி