Home /News /business /

மே 18 : பெட்ரோல், டீசல் இன்றைய விலை நிலவரம்

மே 18 : பெட்ரோல், டீசல் இன்றைய விலை நிலவரம்

பெட்ரோல், டீசல் விலை

பெட்ரோல், டீசல் விலை

Petrol Diesel Price Today : சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் 42ஆவது நாளாக இன்றும் மாற்றம் இன்றி விற்பனை செய்யப்படுகிறது.

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன.

    டீசல் விலை வரலாறு காணாத உச்சமாக ரூ.100-ஐ கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல பெட்ரோல் விலையும் 110 ரூபாயை கடந்து விற்பனையாகிறது. எரிபொருட்களின் விலை உயர்வால், அத்தியாவசியப் பொருட்களின் விலையும் நாளுக்கு நாள் தொடர்ந்து உயர்ந்து வருகின்றது.

    கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி (புதன் கிழமை) பெட்ரோல் லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து, சென்னையில் 110.85 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து 100.94 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து 42வது நாளாக இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.

    நேற்று விற்பனை செய்யப்பட்ட அதே விலையில் இன்றும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 110.85 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் 100.94 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்களும் சற்றே நிம்மதி அடைந்துள்ளனர்.

    Must Read : பேரறிவாளன் விடுதலை வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு..!

    இந்நிலையில், இந்தியாவில் பெட்ரோல் விலை ஹாங்காங், ஜெர்மனி, உள்ளிட்ட நாடுகளை விட குறைவாக உள்ளது. அதே சமயம் பிரேசில், சீனா, ஜப்பான், அமெரிக்கா, ரஷ்யா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட நாடுகளை விட அதிகம் என ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. அதன்படி, உலகின் 106 நாடுகளுடன் ஒப்பிடும் போது, இந்தியாவில் பெட்ரோல் விலை 1.35 டாலர் என்றும், அதன்படி இந்தியா 42வது இடத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Suresh V
    First published:

    Tags: Petrol, Petrol Diesel Price, Petrol-diesel

    அடுத்த செய்தி