Home /News /business /

பெட்ரோல், டீசல் இன்றைய (மே 17-2022) விலை இதுதான்

பெட்ரோல், டீசல் இன்றைய (மே 17-2022) விலை இதுதான்

பெட்ரோல்-டீசல்

பெட்ரோல்-டீசல்

Petrol Diesel Price Today : சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் 41ஆவது நாளாக இன்றும் மாற்றம் இன்றி விற்பனை செய்யப்படுகிறது.

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன.

    இந்நிலையில், டீசல் வரலாறு காணாத உச்சமாக ரூ.100-ஐ கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல பெட்ரோல் விலையும் 110 ரூபாயை கடந்து விற்பனையாகிறது. எரிபொருட்களின் விலை உயர்வால், அத்தியாவசியப் பொருட்களின் விலையும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகின்றது.

    கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி (புதன் கிழமை) பெட்ரோல் லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து, சென்னையில் 110.85 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து 100.94 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து 41வது நாளாக இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. நேற்று விற்பனை செய்யப்பட்ட அதே விலையில் இன்றும் விற்பனை செய்யப்படுகிறது.

    அதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 110.85 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் 100.94 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்களும் சற்றே நிம்மதி அடைந்துள்ளனர்.

    இந்நிலையில், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு மற்றும் வேலையில்லா திண்டாட்டம் ஆகியவற்றை கண்டித்து மே 25ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நாடு தழுவிய போராட்டம் நடத்த இடதுசாரிகள் அழைப்பு விடுத்து உள்ளன.

    Must Read : நெல்லை கல்குவாரி விபத்து.. பாறை இடுக்குகளில் இருந்து லாரி கிளீனர் முருகன் சடலமாக மீட்பு.. தொடரும் சோகம்

    இதுதொடர்பாக இடதுசாரிகள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஓராண்டில் பெட்ரோலியப் பொருட்களின் விலை 70 சதவீதமும், காய்கறிகளின் விலை 20 சதவீதமும், சமையல் எண்ணெய் விலை 23 சதவீதமும் அதிகரித்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளன.

    பெட்ரோலியப் பொருட்கள், எரிவாயு சிலிண்டர்களின் தொடர்ச்சியான விலை உயர்வு மற்றும் கோதுமை தட்டுப்பாடு ஆகியவை பணவீக்கத்தை அதிகரிப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Suresh V
    First published:

    Tags: Petrol, Petrol Diesel Price, Petrol-diesel

    அடுத்த செய்தி