சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், டீசல் வரலாறு காணாத உச்சமாக ரூ.100-ஐ கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல பெட்ரோல் விலையும் 110 ரூபாயை கடந்து விற்பனையாகிறது. எரிபொருட்களின் விலை உயர்வால், அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயர்ந்து வருகின்றது.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி (புதன் கிழமை) பெட்ரோல் லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து, சென்னையில் 110.85 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து 100.94 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து 40வது நாளாக இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. நேற்று விற்பனை செய்யப்பட்ட அதே விலையில் இன்றும் விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 110.85 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் 100.94 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்களும் சற்றே நிம்மதி அடைந்துள்ளனர்.
Must Read : திருவண்ணாமலையில் திடீரென பெய்த மழை.. குடை பிடித்து கிரிவலம் சென்ற பக்தர்கள்
இந்நிலையில், நேபாளத்தில் பெட்ரோல், டீசல் விலை கடந்த சனிக்கிழமை முதல் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. அதன் படி அந்நாட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் 10 ரூபாய் அதிகரித்து 170 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு லிட்டர் டீசல் 153 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதனால் அந்நாட்டு மக்கள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.