Home /News /business /

பெட்ரோல், டீசல் இன்றைய (மே 13-2022) விலை நிலவரம்

பெட்ரோல், டீசல் இன்றைய (மே 13-2022) விலை நிலவரம்

பெட்ரோல், டீசல் விலை

பெட்ரோல், டீசல் விலை

Petrol Diesel Price Today : பெட்ரோல், டீசல் விலையில் 37ஆவது நாளாக இன்றும் மாற்றம் இன்றி விற்பனை செய்யப்படுகிறது.

    கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், டீசல் வரலாறு காணாத உச்சமாக ரூ.100-ஐ கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல பெட்ரோல் விலையும் 110 ரூபாயை கடந்து விற்பனையாகிறது.

    பெட்ரோல்-டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை உயர்வால், அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயர்ந்து வருகின்றது. இந்நிலையில், கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி (புதன் கிழமை) பெட்ரோல் லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து, சென்னையில் 110.85 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து 100.94 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து 37வது நாளாக இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. நேற்று விற்பனை செய்யப்பட்ட அதே விலையில் இன்றும் விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 110.85 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் 100.94 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்களும் சற்றே நிம்மதி அடைந்துள்ளனர்.

    இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி புதுக்கிராமம் மெயின் ரோட்டில், இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்தும், விலையை குறைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடந்தப்பட்டது.

    Must Read : வானிலை தகவல் தொடர்பாக யூ டியூப் தொடங்கி சாதனை படைக்கும் மாணவர் - விவசாயிகளுக்காக வானிலை செயலியை உருவாக்க முயற்சி

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் கோமதி தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர் ரஞ்சிதம், தமிழரசி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் சரோஜா, தாலுகா செயலாளர் பாபு மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Petrol, Petrol Diesel Price, Petrol-diesel

    அடுத்த செய்தி