Home /News /business /

பெட்ரோல், டீசல் இன்றைய (மே 12-2022) விலை இதுதான்

பெட்ரோல், டீசல் இன்றைய (மே 12-2022) விலை இதுதான்

பெட்ரோல் , டீசல் விலை நிலவரம்

பெட்ரோல் , டீசல் விலை நிலவரம்

Petrol Diesel Price Today : சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் 36ஆவது நாளாக இன்றும் மாற்றம் இல்லை.

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், வரலாறு காணாத உச்சமாக டீசல் ரூ.100 கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல பெட்ரோல் விலையும் 110 ரூபாயை கடந்து விற்பனையாகிறது.

    எரிபொருட்களின் விலை உயர்வால், அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயர்ந்து வருகின்றது. இந்நிலையில், ஏப்ரல் 6ஆம் தேதி (புதன் கிழமை) பெட்ரோல் லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து, சென்னையில் 110.85 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து 100.94 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து 36வது நாளாக இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. நேற்று விற்பனை செய்யப்பட்ட அதே விலையில் இன்றும் விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 110.85 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் 100.94 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்களும் சற்றே நிம்மதி அடைந்துள்ளனர்.

    இந்நிலையில், ஸ்பெயின் அதிபர் பெட்ரோ சான்செஸ், ஒரு லிட்டர் எரிபொருளுக்கு 20 செண்ட் தள்ளுபடி வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார். இந்த மானியத்திற்காக அரசு 15 செண்ட் செலுத்தும் என்றும் பெட்ரோல் நிலையங்கள் 5 செண்ட் செலுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

    ஸ்பெயின் அரசின் இந்த கொள்கை முடிவு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் சிறு மற்றும் நடுத்தர பெட்ரோல் நிலையங்களுக்கு இதனால் அதிக இழப்பு ஏற்படும் என கண்டன குரல்கள் எழுந்தன. இதனால் 350-க்கும் அதிகமான பெட்ரோல் நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    Must Read : கரையைக் கடந்தது அசானி புயல்... தமிழ்நாட்டில் 5 நாள்களுக்கு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்

    மேலும், இதே நிலை தொடர்ந்தால் ஸ்பெயின் முழுவதும் சுமார் 3,000 முதல் 4,000 பெட்ரோல் நிலையங்களை மூட வேண்டிய நிலை ஏற்படும் என அந்நாட்டின் எரிபொருள் விநியோகஸ்தர்கள் கவலை தெரிவித்துள்ளனர் என்பது குறிப்டத்தக்கது.

    இலங்கையில் பெட்ரோல், டீசல் விற்பனை நிறுத்தம்:

    இலங்கையில் பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து மக்கள் வெகுண்டெழுந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றர். அங்கே பெட்ரோல், டீசல் விற்பனையை சிலோன் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. இலங்கையில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக பெட்ரோல், டீசல் விற்பனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக பெட்ரோலியம் கார்ப்பரேஷன் தெரிவித்திருக்கிறது.
    Published by:Suresh V
    First published:

    Tags: Petrol, Petrol Diesel Price, Petrol-diesel

    அடுத்த செய்தி