Home /News /business /

பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமா? - இன்றைய (ஜூன் 8, 2022) விலை நிலவரம்

பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமா? - இன்றைய (ஜூன் 8, 2022) விலை நிலவரம்

பெட்ரோல் , டீசல் விலை நிலவரம்

பெட்ரோல் , டீசல் விலை நிலவரம்

Petrol Diesel Price Today : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை 18ஆவது நாளாக இன்றும் விலையில் மாற்றம் இன்றி விற்பனை செய்யப்படுகிறது.

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன.

    இந்நிலையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு கடந்த மே மாதம் 21ஆம் தேதி அதிரடியாக குறைத்தது. அதன்படி, டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாயும், பெட்ரோல் விலை 9 ரூபாய் 50 காசுகளும் குறைக்கப்பட்டன. அதன்படி, சென்னையில் லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டது. டீசல் விலை 94 ரூபாய் 24 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டது.

    அதன் பின்னர் தொடர்ந்து 18ஆவது நாளாக இன்றும் பெட்ரோல்-டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி சென்னையில் இன்று (ஜூன் 8, 2022) நேற்றைய விலையில் மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் விலை ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் ஶ்ரீபெரும்புத்தூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, தமிழ்நாட்டுக்கு ஒரு லிட்டர் பெட்ரோலில் 56 பைசா தான் வரி வருவாய் கிடைக்கிறது என்றும், மீதமுள்ள வரி வருவாய் அனைத்தும் மத்திய அரசுக்கு தான் செல்கிறது என்றும் தெரிவித்தார். எனவே மத்திய அரசுக்கு செல்கின்ற வரியை குறைத்தாலே விலையும் குறையும் என்று கூறினார்.

    Must Read : பிறந்து 40 நாட்களே ஆன பச்சிளங்குழந்தையை பக்கெட் நீரில் மூழ்கடித்து கொன்ற கொடூரம் - தாயும் மகளும் கொடுத்த பரபரப்பு வாக்குமூலம்

    பெட்ரோல் விலையை குறைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், விலை குறைப்பு குறித்து மத்திய-மாநில அரசுகள் மாறி மாறி குறை கூறி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Suresh V
    First published:

    Tags: Petrol, Petrol Diesel Price, Petrol-diesel

    அடுத்த செய்தி