Home /News /business /

பெட்ரோல், டீசல் இன்றைய (ஜூன் 6, 2022) விலை இதுதான்

பெட்ரோல், டீசல் இன்றைய (ஜூன் 6, 2022) விலை இதுதான்

பெட்ரோல் , டீசல் விலை நிலவரம்

பெட்ரோல் , டீசல் விலை நிலவரம்

Petrol Diesel Price Today : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை 16ஆவது நாளாக இன்றும் விலையில் மாற்றம் இன்றி விற்பனை செய்யப்படுகிறது.

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன.

    இந்நிலையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு கடந்த மே மாதம் 21ஆம் தேதி அதிரடியாக குறைத்தது. அதன்படி, டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாயும், பெட்ரோல் விலை 9 ரூபாய் 50 காசுகளும் குறைக்கப்பட்டன. அதன்படி, சென்னையில் லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டது. டீசல் விலை 94 ரூபாய் 24 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து, 16ஆவது நாளாக இன்றும் பெட்ரோல்-டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி சென்னையில் இன்று (ஜூன் 6, 2022) நேற்றைய விலையில் மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் விலை ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில், இலங்கையைத் தொடர்ந்து மற்றொரு அண்டை நாடான பாகிஸ்தானிலும் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. அங்கு பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை கடுமையாக அதிகரித்துள்ளது. அதன்படி பாகிஸ்தானில் ஒருலிட்டர் பெட்ரோல் விலை 200ரூபாயை கடந்து விற்பனையாகிறது.

    Must Read : தடுப்பணை நீரில் மூழ்கி உயிரிழந்த 7 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி.. முதல்வர் அறிவிப்பு

    இதற்கிடையில், பெட்ரோல், டீசல் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி நூற்றுக்கணக்கான பொதுமக்கள் அங்கே போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி லாகூர், கராச்சி, இஸ்லாமாபாத் உள்ளிட்ட இடங்களில் மக்கள் பெருமளவில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Suresh V
    First published:

    Tags: Petrol, Petrol Diesel Price, Petrol-diesel

    அடுத்த செய்தி