சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன.
இந்நிலையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு கடந்த மே மாதம் 21ஆம் தேதி குறைத்தது. அதன்படி, டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாயும், பெட்ரோல் விலை 9 ரூபாய் 50 காசுகளும் குறைக்கப்பட்டன. அதன்படி, சென்னையில் லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டது. டீசல் விலை 94 ரூபாய் 24 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டது.
அதன் பின்னர் தொடர்ந்து 27ஆவது நாளாக இன்றும் பெட்ரோல்-டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி சென்னையில் இன்று (ஜூன் 17, 2022) நேற்றையை விலையில் மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் விலை ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. விலையில் மாற்றம் செய்யப்படாததால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் சற்றே நிம்மதி அடைந்துள்ளனர்.
இந்நிலையில், எண்ணெய் நிறுவனங்களின் திடீர் கட்டுப்பாடு காரணமாக தமிழகத்தில் கிராமப்புறங்களில் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதன்படி, பெட்ரோல்-டீசல் விற்பனை நிலையங்கள் ஏற்கனவே உள்ள கடனை உடனடியாக அடைக்க வேண்டும் என்றும், முன்தொகை கட்ட செலுத்த வேண்டும் என்றும் எண்ணெய் நிறுவனங்கள் உத்தரவு பிறப்பித்துள்ளன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
மேலும், இனி முன்பணம் செலுத்தும் சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மட்டுமே பெட்ரோல்-டீசல் வினியோகத்தை எண்ணெய் நிறுவனங்கள் மேற்கொள்ளும் என்றும் அறிவித்துள்ளன. இதனால், வழக்கமாக ஒரு சில நாட்கள் கடன் அடிப்படையில் பெட்ரோல்-டீசல் பெற்று விற்பனை செய்து வந்த விற்பனை நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
Must Read : சென்னைவாசிகள் கவனத்திற்கு..! முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம்..
இதனால், தமிழகத்தில் தேனி, கிருஷ்ணகிரி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் தட்டுப்பாடு நிலவுகிறது. இது மேலும் பல மாவட்டங்களில் பரவ தொடங்கியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. தமிழகத்தின் கிராமப்புறங்களில் அதிக தட்டுப்பாடு ஏற்பட தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.