Home /News /business /

இந்தியாவில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடா?... இன்றைய (ஜூன் 16, 2022) விலை நிலவரம்

இந்தியாவில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடா?... இன்றைய (ஜூன் 16, 2022) விலை நிலவரம்

பெட்ரோல் , டீசல் விலை நிலவரம்

பெட்ரோல் , டீசல் விலை நிலவரம்

Petrol Diesel Price Today : சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 26ஆவது நாளாக இன்றும் மாற்றம் இன்றி விற்பனை செய்யப்படுகிறது.

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன.

    இந்நிலையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு கடந்த மே மாதம் 21ஆம் தேதி குறைத்தது. அதன்படி, டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாயும், பெட்ரோல் விலை 9 ரூபாய் 50 காசுகளும் குறைக்கப்பட்டன. அதன்படி, சென்னையில் லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டது. டீசல் விலை 94 ரூபாய் 24 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டது.

    அதன் பின்னர் தொடர்ந்து 26ஆவது நாளாக இன்றும் பெட்ரோல்-டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி சென்னையில் இன்று (ஜூன் 16, 2022) நேற்றைய விலையில் மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் விலை ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    இந்நிலையில், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல், டீசல் பயன்பாடு திடீரென அதிகரித்துள்ளது. குறிப்பாக தனியார் விற்பனை நிலையங்களை விட, பொதுத்துறை நிறுவனங்களின் பெட்ரோல் பங்க்களில் விற்பனை அதிகரித்து வருவதாக அந்தந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இதனால் அந்தந்த மாநிலங்களில் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் பெட்ரோல்-டீசலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    குறிப்பாக மத்திய பிரதேசம், ராஜஸ்தான், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பல விற்பனை நிலையங்கள், பெட்ரோல்-டீசல் இன்றி மூடப்பட்டன. இதனால் பெரும்பாலான பெட்ரோல் விற்பனை நிலையங்களில் வாகன ஓட்டிகள் பல மணி நேரம் காத்திருக்கும் நிலை உருவானது. இந்நிலையில், இத்தகைய கூடுதல் தேவையையும் சமாளிக்கும் வகையில் நாடு முழுவதும் போதுமான அளவுக்கு பெட்ரோல்-டீசல் கையிருப்பு உள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதற்கிடையே பெட்ரோல்-டீசல் தட்டுப்பாடு குறித்து பல்வேறு பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களும் தகவல் வெளியிட்டுள்ளன. கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளில் கட்டணங்கள் அதிகரிக்காததால், அரசுப் போக்குவரத்துக்கழகம் போன்ற மொத்தமாக வாங்குபவர்கள் எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து நேரடியாக வாங்குவதை விட பெட்ரோல் பம்புகளிலேயே நிரப்புவதே இத்தகைய தேவை அதிகரிப்புக்கு காரணம் என அந்த நிறுவனங்கள் கூறியுள்ளன.

    Must Read : கொரோனாவுக்கு தஞ்சாவூரில் 18 வயது இளம்பெண் மரணம்.. 3 மாதங்களுக்கு பிறகு உயிரிழப்பு

    எனினும் சில்லறை விற்பனையாளர்களுக்கு வழங்குவதற்கான பெட்ரோல்-டீசல் போதுமான அளவுக்கு கையிருப்பு இருப்பதாகவும் கூறியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Suresh V
    First published:

    Tags: Petrol, Petrol Diesel Price, Petrol-diesel

    அடுத்த செய்தி