Home /News /business /

ஜூன் 15 : பெட்ரோல், டீசல் இன்றைய விலை நிலவரம்

ஜூன் 15 : பெட்ரோல், டீசல் இன்றைய விலை நிலவரம்

பெட்ரோல், டீசல் விலை

பெட்ரோல், டீசல் விலை

Petrol Diesel Price Today : சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 25ஆவது நாளாக இன்றும் மாற்றம் இன்றி விற்பனை செய்யப்படுகிறது.

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன.

    இந்நிலையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு கடந்த மே மாதம் 21ஆம் தேதி குறைத்தது. அதன்படி, டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாயும், பெட்ரோல் விலை 9 ரூபாய் 50 காசுகளும் குறைக்கப்பட்டன. அதன்படி, சென்னையில் லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டது. டீசல் விலை 94 ரூபாய் 24 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டது.

    அதன் பின்னர் தொடர்ந்து 25ஆவது நாளாக இன்றும் பெட்ரோல்-டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி சென்னையில் இன்று (ஜூன் 15, 2022) நேற்றையை விலையில் மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் விலை ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. விலையில் மாற்றம் செய்யப்படாததால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் சற்றே நிம்மதி அடைந்துள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில், அமெரிக்காவில் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டில் பெட்ரோல் நிலையம் வைத்திருக்கும் சீக்கியரான ஜஸ்விந்த்ரே சிங் என்பவர் மிகக்குறைந்த விலையில் வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல், டீசலை வழங்கி வருகிறார். அதன்படி, நாளொன்றுக்கு 3,785 லிட்டர் அளவிலான எரிபொருளை மிகக்குறைந்த விலையில் விநியோகித்து வருகிறார்.

    Must Read : சிக்கன் 65ல பீஸ் எங்க? கஞ்சா கும்பல் அட்டூழியம்

    இதனால் நாள்தோறும் தமக்கு 500 டாலர்கள் அளவுக்கு இழப்பு ஏற்படுவதாக ஜஸ்விந்த்ரே சிங் கூறுகிறார். மேலும், வாகன ஓட்டிகளின் சுமையைக் குறைக்கும் வகையில் அவர்களுக்கு குறைந்த விலையில் எரிபொருள் விநியோகித்து வருவதாகவும், தான் பணம் சம்பாதிக்க இங்கு வரவில்லை என்றும் மற்றவர்களுக்கு உதவுவதில் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்துள்ளார்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Petrol, Petrol Diesel Price, Petrol-diesel

    அடுத்த செய்தி