Home /News /business /

பெட்ரோல், டீசல் இன்றைய (ஜூன் 14, 2022) விலை நிலவரம்

பெட்ரோல், டீசல் இன்றைய (ஜூன் 14, 2022) விலை நிலவரம்

பெட்ரோல் , டீசல் விலை நிலவரம்

பெட்ரோல் , டீசல் விலை நிலவரம்

Petrol Diesel Price Today : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை 24ஆவது நாளாக இன்றும் மாற்றம் இன்றி விற்பனை செய்யப்படுகிறது.

    கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன.

    இந்நிலையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு கடந்த மே மாதம் 21ஆம் தேதி குறைத்தது. அதன்படி, டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாயும், பெட்ரோல் விலை 9 ரூபாய் 50 காசுகளும் குறைக்கப்பட்டன.  சென்னையில் லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டது. டீசல் விலை 94 ரூபாய் 24 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து 24ஆவது நாளாக இன்றும் பெட்ரோல்-டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனை செய்யப்படுகிறது.  சென்னையில் இன்று (ஜூன் 14, 2022) நேற்றையை விலையில் மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் விலை ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. விலையில் மாற்றம் செய்யப்படாததால் வாகன ஓட்டிகைளும் பொதுமக்களும் சற்றே நிம்மதி அடைந்துள்ளனர்.

    இந்நிலையில், பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் இலங்கையில் கடந்த சில மாதங்களாக பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு நீடித்து வருகிறது. எரிபொருளை வாங்க மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், பெட்ரோல், டீசல் தட்டுப்பாட்டை சமாளிக்க அவற்றின் விற்பனையில் புதிய நடைமுறையை பின்பற்ற இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இது குறித்து இலங்கையின் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர,நிதிச் சிக்கல்களுக்கு மத்தியில் ஒரு வாரத்திற்கான எரிபொருளை, ஒவ்வொரு முறையும் அரசு இறக்குமதி செய்கிறது. ஆனால், சிலர் தங்கள் இயந்திரங்கள் மற்றும் ஜெனரேட்டர்களுக்காக ஒரு மாதத்திற்கு தேவையான எரிபொருட்களை மொத்தமாக வாங்கி செல்கின்றனர்.

    Must Read : இனி கட்டணம் வசூலிக்கப்படும்... டெலிகிராம் புதிய அறிவிப்பால் பயனர்கள் அதிர்ச்சி

    இதன் காரணமாக, வாடிக்கையாளர்களுக்கு முன்பதிவு மூலமாக வாரத்திற்கு ஒரு குறிப்பிட்ட அளவிலான எரிபொருளை மட்டுமே,விநியோகிக்கும் முறை ஜூலை முதல் வாரத்தில் இருந்து அமலுக்கு வரும் என்றும், நிலையாக எரிபொருள் வழங்கும் சூழல் உருவாகும் வரையில் இந்த நடைமுறை தொடரும் எனவும் தெரிவித்துள்ளார்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Petrol, Petrol Diesel Price, Petrol-diesel

    அடுத்த செய்தி