Home /News /business /

ஜூன் 13 : பெட்ரோல், டீசல் இன்றைய விலை நிலவரம்

ஜூன் 13 : பெட்ரோல், டீசல் இன்றைய விலை நிலவரம்

பெட்ரோல் டீசல் விலை

பெட்ரோல் டீசல் விலை

Petrol Diesel Price Today : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை 23ஆவது நாளாக இன்றும் விலையில் மாற்றம் இன்றி விற்பனை செய்யப்படுகிறது.

    கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன.

    இந்நிலையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு கடந்த மே மாதம் 21ஆம் தேதி குறைத்தது. டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாயும், பெட்ரோல் விலை 9 ரூபாய் 50 காசுகளும் குறைக்கப்பட்டன. அதன்படி, சென்னையில் லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டது. டீசல் விலை 94 ரூபாய் 24 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டது.

    அதன் பின்னர் தொடர்ந்து 23ஆவது நாளாக இன்றும் பெட்ரோல்-டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி சென்னையில் இன்று (ஜூன் 13, 2022) நேற்றையை விலையில் மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் விலை ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. விலையில் மாற்றம் செய்யப்படாததால் வாகன ஓட்டிகைளும் பொதுமக்களும் சற்றே நிம்மதி அடைந்துள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில், இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய்யின் பேஸ்கட் விலை கடந்த சில நாட்களாகத் உயர்ந்து வந்த நிலையில் தற்போது 10 ஆண்டுகளில் இல்லாத உச்ச விலையாக 121 டாலர் வரையில் உயர்ந்துள்ளது. அதன்படி, இந்திய பேஸ்கட் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 121.28 டாலராக உள்ளது.

    Must Read : கொடுங்கையூர் லாக்கப் டெத் - காவல் ஆய்வாளர் உட்பட 5 பேர் சஸ்பெண்ட்

    அமெரிக்கா பெடரல் ரிசர்வ் வங்கியின் வட்டி விகித உயர்வால் டாலர் ஆதிக்கம் அதிகரித்து, ரூபாய் மதிப்பு சரிவடைந்து வருகிறது. இதற்கிடையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளதால் கூடுதலான பணத்தை கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எனினும் ரஷ்யாவின் டிஸ்கவுன்ட் கச்சா எண்ணெய் இந்தியாவிற்கு நற்பலன்களை அளிக்கும் என்று சொல்லப்படுகிறது.
    Published by:Suresh V
    First published:

    Tags: Petrol, Petrol Diesel Price, Petrol-diesel

    அடுத்த செய்தி